ரேஷன் அட்டை இல்லனாலும் ஜாக்பாட் தான்.. ரூ.6,000 வழங்க அரசு முடிவு

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 8, 2024, 11:00 AM IST
  • ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நிவாரணம்.
  • ரூ. 6000 நிவாரணம் வழங்குவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசின் தரப்பில் வெளியிடப்படும்.
  • கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது.
ரேஷன் அட்டை இல்லனாலும் ஜாக்பாட் தான்.. ரூ.6,000 வழங்க அரசு முடிவு title=

மிக்ஜாம் புயல் நிவாரணம் ரூ 6 ஆயிரம் : கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் வீசிய மிகஜாம் புயல், சென்னையையே புரட்டு போட்டுவிட்டது.. சென்னை மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த புயல் காரணமாக, சென்னை உட்பட 4 மாவட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து, வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள், பர்னிச்சர்கள் என அனைத்து பொருட்களும் வெள்ளத்தில் மூழ்கியதுடன், இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ 6 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து இருந்தார்.

இதன் பின்னர் பயனாளிகள் பட்டியல் அடிப்படையில், நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி மாலை முதல் டோக்கன் வழங்கப்பட்டது. பிறகு கடந்த 17 ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை ரேஷன் கடைகள் (Tamil Nadu Ration Card Holders) மூலமாக விநியோகப்பட்டது. 

மேலும் படிக்க | National Pension Scheme, NPS Withdrawal Rules:பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்.!!

இந்நிலையில் மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே கனமழை, புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேரும் இந்த நிவாரணத் தொகையை கோரி விண்ணப்பம் செய்திருந்த நிலையில், தற்போது ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளதால், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) உத்தரவிட்டார்.

இதன் பின்னர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் விண்ணப்பித்தோரின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்கள் கண்டறியப்பட்டனர். இதையடுத்து ரேஷன் அட்டை இல்லாமல்இருக்கும் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம் வழக்கப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த நிலையில், விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு நிவாரணம் குறித்து விரைவில் அறிவிப்பு என தமிழக அரசு (Tamil Nadu Government) அறிவித்துள்ளது.

முன்னதாக குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோர் தனித்தனியாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதற்கான விண்ணப்ப படிவம் ரேஷன் கடைகள் (Cyclone Michaung Relief Fund) மூலம் வழங்கப்பட்டது. நிவாரண தொகை பெறாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th pay commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 மிகப்பெரிய பரிசுகள், மாத சம்பளத்தில் ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News