EPF கணக்கில் புதிய மொபைல் எண்ணை இணைக்க வேண்டுமா? இதோ எளிய ஆன்லைன் செயல்முறை

EPFO Update: இபிஎஃப் சந்தாதாரர்கள் சில முக்கிய விஷயங்களில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அதில் ஒன்று மொபைல் எண்ணை இணைப்பது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 27, 2023, 03:50 PM IST
  • புதிய மொபைல் எண்ணை இணைக்கும் செயல்முறை.
  • மொபைல் எண் இல்லையென்றால் என்ன செய்வது?
  • மொபைல் மூலம் இந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
EPF கணக்கில் புதிய மொபைல் எண்ணை இணைக்க வேண்டுமா? இதோ எளிய ஆன்லைன் செயல்முறை title=

அலுவலக பணியில் இருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், உங்களிடம் இபிஎஃப் (EPF) கணக்கு கண்டிப்பாக இருக்கும். இபிஎஃப் சந்தாதாரர்கள் சில முக்கிய விஷயங்களில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அதில் ஒன்று மொபைல் எண்ணை இணைப்பது. உங்கள் மொபைல் எண்ணை உங்கள் PF கணக்குடன் இணைப்பது மிகவும் முக்கியமாகும். 

சில நேரங்களில் சில சிறப்புக் காரணங்களால் உங்கள் EPF கணக்கில் உங்கள் மொபைல் எண்ணை மாற்ற வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் எதிர்கொண்டால், அதற்கு எங்கும் சென்று அலைய வேண்டிய அவசுயம் இல்லை. வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் எண்ணை உங்கள் EPF கணக்கில் இணைக்கலாம். EPF கணக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால், அதாவது EPFO மூலம் நிர்வகிக்கப்படுகிறது, .

புதிய மொபைல் எண்ணை இணைக்கும் செயல்முறை

- முதலில் EPFO ​​உறுப்பினர் போர்ட்டலுக்குச் (https://www.epfindia.gov.in/site_en/index.php) செல்லவும் .

- இங்கே நீங்கள் ‘Of Employees’ ஆப்ஷனைக் காண்பீர்கள். நீங்கள் அதை கிளிக் செய்ய வேண்டும். 

- அதன் பின்னர் UAN/Online Services என்பதைக் கிளிக் செய்யவும்.

- லாக் இன் செய்யும் ஆப்ஷன் தோன்றும். UAN மற்றும் பாஸ்வர்டைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும். 

- லாக் இன் செய்ய OTP ஐ உள்ளிட வேண்டும்.

- இதற்குப் பிறகு, ‘மேனேஜ்’ என்பதில் ‘தொடர்பு விவரங்களைக்’ (Contact Details) கிளிக் செய்ய வேண்டும்.

- இதற்குப் பிறகு, மொபைல் எண்ணை சரிபார்த்து மாற்றவும்.

- ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு Get OTP என்பதைக் கிளிக் செய்யவும். 

- இதற்குப் பிறகு OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும். இதன் பிறகு உங்கள் மொபைல் எண் மாறிவிடும். 

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானத்தை அள்ளித் தரும் தக்காளி சாஸ் பிஸினஸ்

மொபைல் எண் இல்லையென்றால் என்ன செய்வது?

உங்கள் மொபைல் எண் PF உடன் இணைக்கப்படவில்லை என்றால், முதலில் புதிய எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் உள்நுழைவு பக்கத்தில் ‘Forgot Password' என்பதில் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு UAN எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினத்தை உள்ளிடவும். பின்னர் கேப்ட்சா குறியீடு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP ஐ கிளிக் செய்யவும். இந்த வழியில் புதிய எண் புதுப்பிக்கப்படும்.

மொபைல் மூலம் இந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

EPFO இல் பதிவுசெய்யப்பட்ட பணியாளர்கள் எஸ்எம்எஸ் சேவை அல்லது உமங் செயலி (UMANG App) மூலம் ஆன்லைனில் பல சேவைகளைப் பெறலாம். மொபைலில் இருந்து SMS அனுப்பி பின்வரும் சேவைகளைப் பெறலாம்.

- UAN மற்றும் ஸ்டேட்டஸ் (active or inactive)
- EPF விவரங்கள்
- EPF/PF இருப்பு
- EPF டிரான்ஸ்ஃபர் அல்லது வித்ட்ராயல் ஸ்டேட்டஸ்
- வங்கி கணக்கு, பான் மற்றும் ஆதார் இணைப்பு நிலை
- கடைசி பங்களிப்பு
- சரிபார்ப்புக்கான OTP

பணியாளர் வருங்கால வைப்பு நிதி

ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதில் முக்கிய வழிகளில் ஒன்று "பணியாளர் வருங்கால வைப்பு நிதி" (EPF) ஆகும். அரசாங்கச் சேமிப்புத் திட்டமான இது, ஊழியர்கள் தங்கள் பணி ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் பரிசு: பண்டிகை காலத்தில் கொண்டாட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News