PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: 3 நாட்களில் அதிக முன்பணம் கிடைக்கும், விதிகளை மாற்றியது EPFO

EPFO Auto Mode Settlement: EPFO அதன் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட அவசரநிலைகளின் போது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இதில் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகியவை அடங்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 18, 2024, 08:55 AM IST
  • தானியங்கி முறையின் மூலம் க்ளைம் செட்டில்மென்ட் செய்யப்படும்.
  • பணம் எடுப்பதற்கான வரம்பு என்ன?
  • அட்வான்ஸ் பெறுவதற்கான செயல்முறை என்ன?
PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: 3 நாட்களில் அதிக முன்பணம் கிடைக்கும், விதிகளை மாற்றியது EPFO title=

EPFO Auto Mode Settlement: மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும் ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இபிஎஃப்ஓ பணி ஓய்வுக்கு பிறகான பாதுகாப்பாக இருப்பதோடு, அதன் உறுப்பினர்களுக்கு இன்னும் பல வித வசதிகளையும் அளிக்கின்றது. EPFO அதன் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட அவசரநிலைகளின் போது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இதில் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகியவை அடங்கும்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் இருப்பிலிருந்து (EPF Balance) பணத்தை எடுப்பதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது. EPFO ஆட்டோ மோட் செட்டில்மென்ட்டைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) பயனடைவார்கள். சில குறிப்பிட்ட அவசரகாலங்களில் PF உறுப்பினர்களுக்கு நிதி வழங்கும் வசதி இது. இதன் கீழ், விண்ணப்பித்து 3 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்படும்.

ஆட்டோ-மோட் செட்டில்மென்ட்டின் (EPFO Auto Mode Settlement) கீழ், அவசரகாலத்தில் ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) முன்பணம் எடுக்கலாம். EPFO தனது சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) சில வகையான அவசரநிலைகளுக்கு பிஎஃப் நிதியிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இதில் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகியவை அடங்கும். இந்த அவசரநிலைகளில் ஏதேனும் ஒன்றிற்கு, பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கிலிருந்து முன்பணத்தை எடுக்கலாம்.

தானியங்கி முறையின் மூலம் க்ளைம் செட்டில்மென்ட் செய்யப்படும்

அவசரகாலத்தில் நிதியை க்ளைம் செட்டில் செய்வதற்கான தானியங்கி செயல்முறை அதாவது ஆட்டோ மோட் (Auto Mode) ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போது உடல்நல பிரச்சனை, அதாவது நோய்களுக்கான சிகிச்சையின் போது மட்டுமே பணத்தை எடுக்க முடியும். இப்போது அதன் நோக்கம் விரிவடைந்துள்ளது. நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்கான நிதி உதவி என இவை அனைத்துக்கும் இப்போது EPFல் இருந்து பணத்தை எடுக்கலாம். இதனுடன், இப்போது சந்தாதாரர்கள் சகோதரி அல்லது சகோதரரின் திருமணத்திற்காகவும் அட்வான்ஸ் பெறலாம். 

மேலும் படிக்க | Car Loan: குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்கும் வங்கிகள்!

பணம் எடுப்பதற்கான வரம்பு என்ன? 

EPF கணக்கில் இருந்து முன்பணம் (Advance Amount) எடுக்கும் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வரம்பு ரூ.50,000 ஆக இருந்தது, தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு முன்பணம் அளிப்பதற்கான செயல்முறை ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் கணினி மூலம் செய்யப்படும். இதற்கு யாரிடமும் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்களின் கணக்கில் பணம் வந்து சேரும். இருப்பினும், நீங்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் KYC, க்ளைம் கோரிக்கைக்கான தகுதி, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை அடங்கும்.

அட்வான்ஸ் பெறுவதற்கான செயல்முறை என்ன? (How To Take EPF Advance)

முதலில் பிஎஃப் உறுப்பினர்கள் EPFO போர்ட்டலில் UAN மற்றும் கடவுச்சொல் கொண்டு லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்த பிறகு, 'Online Service'-க்கு சென்று 'claim Section'-ஐ செலக்ட் செய்ய வேண்டும். பின்னர் உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கைச் செக் செய்ய வேண்டும். முன்பணம் இந்த கணக்கில்தான் வரும். அதன் பிறகு உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கு காசோலை அல்லது பாஸ்புக்கின் நகலை பதிவேற்ற வேண்டும். பின்னர், நீங்கள் எந்த காரணத்திற்காக பணத்தை எடுக்க விரும்புகிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு மேலும் சில செயல்முறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். இப்படி செய்த பின்னர் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் உங்கள் கணக்கில் பணம் வந்துவிடும்.

மேலும் படிக்க | ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - இளைஞர்கள் விரும்பும் 'இந்த புதிய' முதலீடு - என்னது அது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News