கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

Joint Account Benefits : தம்பதிகள் பலர், கூட்டுக்கணக்கு வைத்திருப்பது முக்கியம் என பலர் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Apr 27, 2024, 04:31 PM IST
  • கூட்டுக்கணக்கு வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள்
  • இதனால் சேமிப்பு அதிகரிக்கும்
  • கிரெடிட் ஸ்கோர் உயரும்
கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?  title=

Joint Account Benefits : பலர், வங்கி கணக்குகளை தனித்தனியாக வைத்திருப்பர். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து தொடங்கும் கணக்கிற்கு பெயர்தான் கூட்டுக்கணக்கு (Joint Account)என்பர்.  கூட்டுக்கணக்கு, வைத்திருப்பவர்கள் இருவருக்குமே தங்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி இருக்கிறது. உதாரணத்திற்கு பணத்தை வங்கியில் இருந்து வித்ட்ரா செய்தல், பணத்தை வங்கியில் செலுத்துதல், ஆன்லைனில் பணம் அனுப்புதல் ஆகியவற்றை இருவருமே செய்யலாம். 

கூட்டுக்கணக்கில் இருக்கும் அம்சங்கள்:

>கூட்டுக்கணக்கு தொடங்கியவர்கள், மறைந்து விட்டால் அவர்கள் நாமினியாக யாரை நியமித்துள்ளார்களோ அவர்கள் அந்த கணக்கை தொடரலாம். நாமினி யாரும் நியமிக்க படாமல் இருந்தால், அந்த கணக்கை வைத்துவிட்டு இறந்திருப்பவர்களின் வாரிசுகள் கணக்கில் உள்ள பணத்தை பெற முடியும். 

>கூட்டுக்கணக்கில் இருந்து பணத்தை பெற வேண்டும் என்றாலோ, காசோலை வாயிலாக பணத்தை எடுக்க வேண்டும் என்றாலோ இருவரின் கையெழுத்துமே அதற்கு தேவைப்படும். யாரேனும் ஒருவரின் கையொப்பம் மட்டும் இருந்தால், பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாது. 

>கூட்டுக்கணக்கை வைத்திருப்பவர்களுள் ஒருவர் இறந்து விட்டால், கணக்கை வைத்திருக்கும் இன்னொருவர் கணக்கை முழுமையாக இயக்கலாம். இவர்களை Former or survivor என்று கூறுவர். 

கூட்டுக்கணக்கில் இருக்கும் நன்மைகள்:

வாடிக்கையாளர்களின் வசதி:

கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்பது, செலவுகளை  கண்காணிப்பதை எளிதாக்குகின்றன. ஏனெனில் ஒவ்வொரு கணக்கு வைத்திருப்பவரும் இருப்புத்தொகையைப் பார்த்து, அதன் பிறகு கணக்கில் பணத்தைச் சேர்க்கலாம். வீட்டு செலவுகள், இ.பி பில், குழந்தைகளுக்கு ஆகும் செலவுகள் என அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம். இதனால், இது வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும் ஒரு ஆப்ஷனாக பார்க்கப்படுகிறது. 

>சிறந்த க்ரெடிட் ஸ்கோர்:

இருவர் சேர்ந்து ஒரு கூட்டுக்கணக்கை வைத்திருப்பதால் அவர்களுக்கு க்ரெடிட் ஸ்கோர் உயரும். இது உயர, கணக்காளர்கள் தங்களின் கணக்கை ஆக்டிவாக வைத்துக்கொள்ள வேண்டும். பணம் செலுத்துவது, பணத்தை எடுப்பது போன்றவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும். வங்கி கடன் வாங்கும் சமயத்தில் இந்த க்ரெடிட் ஸ்கோர் உதவியாக இருக்கும். அந்த கடனுக்கான வட்டி விகிதம் இதனால் கணிசமாக குறையும். 

மேலும் படிக்க | EPF Interest: கணக்கில் வட்டி வந்துவிட்டதா? ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் எப்படி செக் செய்வது?

>அதிகரிக்கும் சேமிப்பு:

கூட்டுக்கணக்கு தொடங்குபவர்கள், பெரும்பாலும் சேமிக்கும் நோக்கிலேயே இந்த கணக்கை தொடங்குகிறார்கள். இதனால் இருவராலும் தங்கள் சேமிப்புகளை மதிப்பிடவும் இரட்டிப்பாக்கவும் முடியும். ஒரு சிலர், வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கும், வீட்டில் நிகழ இருக்கும் திருமண நிகழ்விற்கு செலவு செய்வதற்கும் கூட கூட்டுக்கணக்கை தொடங்கியிருப்பர். இவர்களுக்கு இது, வசதியானதாக இருக்கும். 

கூட்டுக்கணக்கு தொடங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

>கூட்டுக்கணக்கு வைத்திருப்பவர்கள் இருவருமே அந்த கணக்கில் நிகழும் பண பரிவர்த்தணைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும். இதனால் பல சமயங்களில் தனி நபர் சுதந்திரம் இல்லாமல் போகலாம்.

>மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள்: கூட்டுக்கணக்கு, பல சமயங்களில் சண்டையிலும் கருத்து வேறுபாட்டிலும் கொண்டு சென்று விடலாம். குறிப்பாக, இருவரும் ஒத்த சிந்தனை உடையவராக இல்லாமல் இருந்தாலோ, செலவுகளின் சுவை வேறுபட்டாலோ மோதல்கள் எழலாம். இது, கூட்டுக்கணக்கிற்கு மட்டுமன்றி, அந்த உறவுக்குமே ஆபத்தாகும். 

மேலும் படிக்க | வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News