Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு, லட்சக்கணக்கில் லாபம், மாதா மாதம் சூப்பர் வருமானம்

Post Office MIS: தபால் நிலையம் மூலம் பல விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று மாதாந்திர வருமான திட்டம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 2, 2024, 08:55 AM IST
  • தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஒற்றை மற்றும் கூட்டு கணக்குகளை திறக்கலாம்.
  • இதற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
  • 2024 ஜனவரி 1 முதல் எம்ஐஎஸ் திட்டத்தில் 7.4% வட்டி அளிக்கப்படுகின்றது.
Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு, லட்சக்கணக்கில் லாபம், மாதா மாதம் சூப்பர் வருமானம் title=

Post Office MIS: மக்களாகிய நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. நாம் அனைவரும் கடினமாக உழைத்து ஈட்டும் பணத்தை சேமிப்பதற்கும், பெருக்குவதற்கும் பல வழிகளை தேடுகிறோம். இன்றைய காலத்தில் இதற்கான பல வழிகளும் உள்ளன. சிலர் தங்கள் பணத்தை குறைந்த நேரத்தில் அதிகமாக பெருக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்கள் இதற்காக ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். சிலர் பணத்திற்கான பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

எனினும் பாதுகாப்பையும் அளித்து நல்ல வருமானத்தையும் அளிக்கும் பல திட்டங்களும் உள்ளன. அவற்றில் அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் (Post Office Schemes) மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன. எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் உங்கள் முதலீடுகளில் உத்திரவாதமான வருமானம் வேண்டும் என்றால் தபால் நிலைய திட்டங்கள் அதற்கு ஏற்றதாக இருக்கும்.

Post Office Saving Schemes:

தபால் நிலையம் மூலம் பல விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்று மாதாந்திர வருமான திட்டம் (Monthly Income Scheme). இந்த திட்டத்தில் ஒருமுறை டெபாசிட் செய்து விட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் கிடைக்கும்.

தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டத்தின் வகைகள்

தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டத்தில் (Post Office MIS) ஒற்றை மற்றும் கூட்டு கணக்குகளை திறக்கலாம். இதற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். 2024 ஜனவரி 1 முதல் எம்ஐஎஸ் திட்டத்தில் 7.4% வட்டி (Interest) அளிக்கப்படுகின்றது.

Post Office MIS: திட்டம் விதிகள் என்ன?

தபால் அலுவலகம் நடத்தும் மாதாந்திர வருமான திட்டத்தில் ஒற்றைக் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும் கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். முதலீட்டாளர் விரும்பினால் திட்ட முதிர்வு காலமான 5 ஆண்டுகளுக்கு பிறகு அசல் தொகை திருப்பி அளிக்கப்படும். எனினும் இந்த திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடியும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அசல் தொகையை எடுக்கவும் அல்லது திட்டத்தை நீட்டிக்கவோ வசதி அளிக்கப்படும். கணக்கில் உள்ள தொகையில் பெறப்படும் வட்டி தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.

Post Office MIS: இதில் குறைந்த பட்ச முதலீடு எவ்வளவு?

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 கொண்டு கணக்கை திறக்கலாம். ஆயிரம் ரூபாயின் மடங்குகளில் இதில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வட்டி அளிக்கப்படுகின்றது. இந்திய குடிமக்கள் அனைவரும் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

போஸ்ட் ஆபீஸ் எம்ஐஎஸ் திட்டம்: இதில் சேர தேவைப்படும் ஆவணங்கள்

எம்ஐஎஸ் கணக்கை (MIS Account) திறக்க ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடையாள சான்றாக வழங்க வேண்டும். இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் வழங்க வேண்டும். அரசு வழங்கிய அடையாள அட்டை அல்லது ஏதாவது பயன்பாட்டு கட்டண பில்களை முகவரி சான்றுக்கு வழங்கலாம். 

மேலும் படிக்க | Paytm Payments வங்கி: பணமோசடி விவகாரத்தில் ரூ 5.49 கோடி அபராதம்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்த ஆவணங்களுடன் தபால் நிலையத்திற்கு சென்று, தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்திற்கான படிவத்தை நிரப்ப வேண்டும். இதை ஆன்லைனிலும் முதலீட்டாளர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இந்த படிவத்தை நிரப்பியவுடன் நாமினியின் பெயரையும் அளிக்க வேண்டும். இந்த கணக்கை துவங்க முதலில் ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ ரூ.1,000 பணம் செலுத்த வேண்டும்.

POMIS: இதில் பெறப்படும் வருமானம் எவ்வளவு? 

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு முதலீட்டாளர் ஒற்றை கணக்கை திறந்து இந்தத் திட்டத்தில் ரூ.9 லட்சம் டெபாசிட் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம். தற்போது இந்த திட்டத்திற்கான வருடாந்திர வட்டி விகிதம் (Interest Rate) 7.4 சதவீதமாக உள்ளது. இந்த வழியில் ஒவ்வொரு மாதமும் ரூ.5,500 வருமானம் கிடைக்கும். 12 மாதங்களுக்கு பார்த்தால் இந்த தொகை 66,600 ரூபாயாக உள்ளது. ஆகையால், வட்டி மூலம் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு பிறகு முதலீட்டாளருக்கு ரூ.3.33 லட்சம் கிடைக்கும்.

போஸ்ட் ஆபீஸ் MIS திட்டத்தின் விதிகளின் படி இரண்டு அல்லது மூன்று நபர்கள் சேர்ந்து கூட்டுக் கணக்கை திறக்கலாம். இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டியானது கூட்டு கணக்கில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒற்றைக் கணக்கை கூட்டுக் கணக்காக மாற்றிக் கொள்ளலாம். அதேபோல், கூட்டுக்கணக்கையும் ஒற்றைக் கணக்காக மாற்றலாம். மாற்றங்களை செய்ய கூட்டுக் கணக்கில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரு கூட்டு விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். இந்த திட்டத்தில் முதிர்வு காலத்திற்கு முன்னதாகவே தொகையை எடுக்கவும் (Premature Closure) முடியும். எனினும், இதற்கான சில விதிகள் உள்ளன.

மேலும் படிக்க | Indian Railways: 150 ரயில் நிலையங்களில் தரமான உணவு... FSSAI சான்றிதழ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News