தபால் நிலையத்தை காட்டிலும் FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் நிறுவனம்!

60 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் பிக்ஸட் டெபாசிட்டு கணக்குகளுக்கு  அதிகபட்சமாக 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 

Written by - RK Spark | Last Updated : Aug 10, 2022, 11:17 AM IST
  • ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் பிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.
  • புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
  • மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
தபால் நிலையத்தை காட்டிலும் FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் நிறுவனம்! title=

வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனது பிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.  இந்த புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பல தவணைக்காலங்களில்  பிக்ஸட் டெபாசிட்டுக்கான விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக 25-50 அடிப்படை புள்ளிகள் அல்லது ஆண்டுக்கு 0.25-0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்த புதிய வட்டி விகிதங்கள் 1 முதல் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்  பிக்ஸட் டெபாசிட்டுக்களுக்கும் பொருந்தும்.  60 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் பிக்ஸட் டெபாசிட்டு கணக்குகளுக்கு  அதிகபட்சமாக 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.  இந்த வட்டி விகிதமானது பல வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட்டு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட அதிகமாகும்.

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, மூத்த குடிமக்கள் ஆண்டுதோறும் அவர்களது டெபாசிட்டுகளுக்கு கூடுதலாக 0.50 சதவீத வட்டி விகிதத்தை பெறுவார்கள்.  முதிர்ச்சியடைந்த நிலையான பிக்ஸட் டெபாசிட் கணக்கை புதுப்பிப்பதன் மூலம் ஆண்டுக்கு 0.25 சதவீத வட்டி கூடுதலாக வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.   ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.40 சதவீதமாக உயர்த்திய பின்னர், கனரா வங்கி மற்றும் ஐஓபி உள்ளிட்ட சில வங்கிகள் தங்களுடைய பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியது.  ஆனால் தற்போது ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் எஃப்டி-க்கு அனைத்து தனியார், பொது மற்றும் சிறு நிதி வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.  

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிப்பு விரைவில்

எஸ்சிஎஸ்எஸ், கிசான் விகாஸ் பத்ரா, பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி கணக்கு (எஸ்எஸ்ஏ), தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (என்எஸ்சி), தேசிய சேமிப்பு மாத வருமானக் கணக்கு (எம்ஐஎஸ்) உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட தபால் அலுவலகத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள். ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பிக்சட் செபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை விட மிகவும் குறைவாக உள்ளது.  வங்கியின் எஃப்டி கணக்குகளை விட நிறுவனத்தின் பிக்ஸட் டெபாசிட்டுகள் சிறந்த வருமானத்தை அளிக்கின்றன, இதன் விளைவாக கார்ப்பரேட் பிக்ஸட் டெபாசிட்டுகள் அதிக ரிஸ்க்-டு-ரிவார்ட் விகிதத்தைக் கொண்டுள்ளன.

மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News