பீட்ரூட் பிடிக்குமா? இந்த பிரச்சனைகள் இருந்தா கண்டிப்பா சாப்பிடாதீங்க, உஷார்!!

Beetroot: பீட்ரூட் நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருவதுடன், பல தீமைகளையும் ஏற்படுத்துகிறது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2023, 01:07 PM IST
  • பீட்ரூட் செரிமான அமைப்புக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
  • ஆனால் இதை அதிகமாக உட்கொள்வது கல்லீரலை பாதிக்கிறது.
  • மேலும், இது அளவுக்கு அதிகமானால் உங்கள் கல்லீரலின் பிரச்சனைகளை அதிகரிக்கிறது.
பீட்ரூட் பிடிக்குமா? இந்த பிரச்சனைகள் இருந்தா கண்டிப்பா சாப்பிடாதீங்க, உஷார்!! title=

பீட்ரூட் பிரச்சனை: பீட்ரூட் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் வேர் காய் வகையாகும். பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை வராது. இத்துடன் உங்களுக்குள் உருவாகும் இரத்தமும் சுத்தமாகும். பலர் தினமும் பீட்ரூட்டை உணவில் உட்கொள்கின்றனர். எனினும், சில நோய்கள் உள்ளவர்கள் பீட்ரூட்டை சாப்பிடவே கூடாது என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதனால் ஏற்கனவே உள்ள உடல் நல பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். பீட்ரூட் நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருவதுடன், பல தீமைகளையும் ஏற்படுத்துகிறது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

வைட்டமின் பி, சி போன்ற சத்துக்கள் இதன் மூலம் கிடைக்கின்றன: 

பீட்ரூட் நம் உடலுக்கு வைட்டமின் பி, சி பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. இதனால் நமது உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கிறது. நோய்களில் இருந்தும் காக்கிறது. உடலுக்குள் மறைந்திருக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றலை பீட்ரூட் நமக்கு வழங்குகிறது. 

பீட்ரூட் எப்போதும் நமது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக, உடல் பல நன்மைகளைப் பெறுகிறது. எனினும், சிலரின் ஆரோக்கியத்தில் பீட்ரூட் தலைகீழ் விளைவையும் ஏற்படுத்தும். ஆகையால் இதை உட்கொள்ளும் முன்னர் சிறிது கவனத்துடன் உஷாராக இருப்பது நல்லது. 

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்க வெந்நீர் குடித்தால் போதுமா? உண்மை என்ன? 

கல்லீரலில் இதன் தாக்கம் 

பீட்ரூட் செரிமான அமைப்புக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இதை அதிகமாக உட்கொள்வது கல்லீரலை பாதிக்கிறது. மேலும், இது அளவுக்கு அதிகமானால் உங்கள் கல்லீரலின் பிரச்சனைகளை அதிகரிக்கிறது. இதில் உள்ள இரும்பு, தாமிரம் போன்ற தனிமங்கள் கல்லீரலில் படியும். கல்லீரல் தொடர்பான நோய்களை உண்டாக்கும். சில சமயங்களில் நம்மால் இதை புரிந்துகொள்ள முடிவதில்லை, ஆனால், பின்னர் இந்த நோய் பெரிய வடிவத்தை எடுக்கும்.

தோல் பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட்டை தவிர்க்க வேண்டும்

தோல் சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் உடலில் சிவப்பு சொறி அல்லது ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், பீட்ரூட்டை உட்கொள்ளக்கூடாது. அரிப்பு, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

சிறுநீரக கல் உள்ளவர்கள்

பீட்ரூட் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் என்பதால் சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களும் இதை தவிர்க்க வேண்டும். பீட்ரூட்டில் உள்ள ஆக்சலேட் என்ற பொருள் சிறுநீரக கற்களின் பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது. இதனால் இந்த நோயாளிகளின் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கின்றன.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இரவில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News