கர்ப்பமாக விரும்பும் பெண்களுக்கு இந்த உணவுகள் அவசியம்! கருவுறுதலுக்கு டிப்ஸ்

Female Fertility Boosters: குழந்தை பெறுவது என்பது இன்று பலவிதமான காரணிகளை அடிப்படையாக கொண்டு முடிவு செய்யப்படுகிறது. அனைத்திலும் முதலாவதாக, ஆண் - பெண் உடல்நிலை அதற்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 20, 2023, 07:02 PM IST
  • குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த உணவுகளை மறக்கவேண்டாம்
  • ஆண் - பெண் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
  • ஊட்டச்சத்து மிகுந்த பழங்களும் உணவுகளும்
கர்ப்பமாக விரும்பும் பெண்களுக்கு இந்த உணவுகள் அவசியம்! கருவுறுதலுக்கு டிப்ஸ் title=

பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணங்களில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்பதும் ,பெண்களின் கருவுறுதல் தகுதியும் இடம் பெறுகிறது.. குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் குறைவாக இருப்பது ஆண்களின் கருவுறுதலை பாதிக்கிறது. இதன் காரணமாக, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படலாம். அதேபோல, ஆரோக்கியமாக இருந்தாலும் கருவுறவில்லை என்று பல பெண்கள் கவலைப்படுகின்றனர்.

அயோடின், ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு போன்ற சில நுண்ணூட்டச்சத்துக்கள் பெண்களின் கரு முட்டைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானவை என்பதால், இந்த சத்துக்கள் அதிகமுள்ள உணவுகளை தினசரி அடிப்படையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 கருவுறுவதற்கான வாய்ப்புகளை அதிகபடுத்த பெண்கள், கொழுப்பு குறைவான உணவுகள், கொட்டைகள், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உணவில் அதிகப்படுத்த வேண்டும். தினசரி உணவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் கால் பங்காக இருக்க வேண்டும். உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், இனிப்பு சோளம், பாஸ்தா, நூடுல்ஸ் மற்றும் அரிசி போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | கருவுறுவதற்கு தேவையான உணவுகள் என்ன? இது ஆண்களுக்குமானது

 சிவப்பு இறைச்சி, கோழி  முட்டை, டோஃபு மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை எடுத்துக் கொள்ளலாம். பச்சை காய்கறிகள், கேரட், பச்சை பீன்ஸ், பட்டாணி, ப்ரோக்கோலி என பல்வேறு வண்ணங்களில் உள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைப்பழம்

சீரான மாதவிடாய் சுழற்சி சரியாக இருந்தால் தான் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமல், கருவுறும் தன்மை அதிகரிக்கும்.  கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும். 

மாதுளை
மாதுளையில் உள்ள ஆரோக்கிய பண்புகள், வேறு எந்த பழத்தையும் விட சிறப்பானது. பெண்களுக்கு  லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது. ஆண்களின் விந்தணுவை தரமாக்கும் வேலையையும் மாதுளம்பழம் செய்கிறது என்பதால், ஆண்களும் இந்த அருமருந்தாகும் பழத்தை உண்பதால், விந்தணுக்களின் தரம் மேம்படும்.

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் உள்ள மாங்கனீசு சத்து,  இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு முக்கியமானது. கூடுதலாக, உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருந்தால், மலட்டுத்தன்மை ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

முட்டை
கருவுறும் தன்மையை அதிகரிப்பதில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி போதுமான அளவு உள்ளதால், கர்ப்பமாக விரும்பும் பெண்கள் முட்டையை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | விந்தணுவின் எண்ணிக்கையையும் தரத்தையும் அதிகரிக்கும் ‘சூப்பர்’ பழங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News