தெலுங்கானாவில் பாஜக-பிஆர்எஸ் இணையுமா? மாறும் காட்சிகள்! கேடிஆர் ஆவேசம்

Telangana Political News: கடந்த லோக்சபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் பிஆர்எஸ் உட்பட பிற கட்சிகள் கவலை. மன உறுதியுடன் இருக்கும் பாஜக. எச்சரிக்கையாக இருக்கும் கேசிஆர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 4, 2023, 05:34 PM IST
  • பிஆர்எஸ் என்றால் பிஜேபி ரிஷ்டேதார் சமிதி (BJP Rishtedaar Samit - BRS) என அர்த்தம் -ராகுல் காந்தி
  • எங்களுக்கு ஆதரவு தாருங்கள் எனக் கேட்ட தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் - பிரதமர் மோடி
  • கதை சொல்வதில் மோடி வல்லவர். அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் -கேடிஆர்
தெலுங்கானாவில் பாஜக-பிஆர்எஸ் இணையுமா? மாறும் காட்சிகள்! கேடிஆர் ஆவேசம் title=

Telangana Latest News: தெலுங்கானா மாநிலத்திற்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வார உள்ளதால், தேர்தலுக்கு முன்பே அம்மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது. நேற்று (2023, அக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை) நிஜாமாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி வந்த தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்க விரும்புகிறோம் என்று ஒருமுறை என்னிடம் கூறியதாகக் கூறினார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். ஆனால் நான் கேசிஆரிடம் சொன்னேன், உங்கள் செயல்பாடுகளால் உங்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது எனக்கூறி அவரின் கோரிக்கையை நிராகரித்து விட்டேன் என பிரதமர் மோடி கூறினார். இது தெலுங்கானா அரசியலில் மட்டுமில்லை, நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

பிரதமர் மோடியின் பேச்சு "அப்பட்டமான பொய்" -கேடிஆர்

பிரதமர் மோடியின் அறிக்கைக்கு பிறகு, தெலுங்கானா அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. கே.சி.ஆர் பற்றி பேசிய பிரதமர் மோடிக்கு பிஆர்எஸ் கட்சி பதிலளித்துள்ளது. கேசிஆரின் மகனும், பிஆர்எஸ் செயல் தலைவருமான கேடி ராமராவ் (கேடிஆர்) பிரதமர் மோடி பேசியது "அப்பட்டமான பொய்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதலாம் -கேடி ராமராவ்

திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுமாறு பிரதமர் மோடிக்கு கே.டி.ஆர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் அவர் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கதை சொல்வதில் வல்லவராக மாறுவார். அதுமட்டுமில்லாமல் அவர் (பிரதமர் மோடி) ஆஸ்கார் விருதையும் வெல்ல முடியும் என்று கூறியுள்ளார். பாஜக என்பது "பொய்யர்களின் கூடாரம்"  என்று வர்ணித்த அவர், 2018 தேர்தலில், அக்கட்சியின் அப்போதைய மாநிலத் தலைவர் டாக்டர் கே.லக்ஷ்மன் மூலம் கூட்டணிப் பேச்சுவரத்தைக்கு தூது அனுப்பி இருந்தார்கள். ஆனால் அடுத்த கணமே அதை நிராகரித்துவிட்டோம் என்றும் கூறியுள்ளார். நாங்கள் போராளிகள், துரோகிகள் அல்ல என பதில் அளித்துள்ளார்.

மேலும் படிக்க - பிரதமர் மோடி ஜோக் அடிப்பது சரியானதல்ல... ராகுல் காந்தி காட்டம்

பிஆர்எஸ் என்றால் பிஜேபி ரிஷ்டேதார் சமிதி - ராகுல் காந்தி தாக்கு

கேசிஆர் பற்றி பிரதமர் மோடி கூறியதை அடுத்து, அதை கையில் எடுத்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிஆர்எஸ் என்றால் பிஜேபி ரிஷ்டேதார் சமிதி (BJP Rishtedaar Samit - BRS) என்று கூறினார். கே.சி.ஆர். பிஆர்எஸ் என்றால் பாஜக உறவினர் குழு என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன் என்று ராகுல் காந்தி கூறினார். இந்த இரு கட்சிகளும் (பாஜக-பிஆர்எஸ்) தெலுங்கானா மாநிலத்திற்கு எந்த நன்மைகளும் செய்யவில்லை. தெலுங்கானா மக்கள் புத்திசாலிகள், அவர்களின் (BJP-BRS)  விளையாட்டை புரிந்து கொண்டு உள்ளனர். இந்த முறை இருவரையும் நிராகரித்து விட்டு ஆறு உத்தரவாதங்களுடன் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பாஜக - பிஆர்எஸ் சண்டை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாற வாய்ப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சும், அதற்கு கேடிஆர் அளித்த விளக்கமும் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தெலுங்கானாவில் பாஜகவும் பிஆர்எஸ்ஸும் இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு பக்கம் தெலுங்கானாவில் பாஜகவின் வளர்ச்சி, மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளாக பிஆர்எஸ் அரசாங்கத்தின் செயல்பாடுகளால் கோபத்தில் இருக்கும் வாக்காளர்கள். இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் நடந்தால், வாக்குகள் சிதறும்பட்சத்தில், அது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளதால், கேசிஆர், ஏன் பா.ஜ.க.வுடன் கை கிக்,கோர்க்க முடியாது என்ற விவாதமும் கிளம்பியுள்ளது. 

மேலும் படிக்க - சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் விரும்புகிறதா? சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மோடி

பிஆர்எஸ் - பாஜகவுடன் கூட்டணி வாய்ப்பில்லை

அதேநேரத்தில் பி.ஜே.பி உடன் கூட்டணி வைத்தால் தங்கள் கட்சிக்கு ஆபத்து வரலாம். கட்சி உடைய வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் வரும். யாருக்கு அதிக அதிகாரம் என்ற பிரச்சனை எழும். அப்பொழுது தங்கள் கட்சிக்கு சிக்கல் ஏற்படலாம் என கே.சி.ஆர் நினைக்கக் கூடும். எனவே பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மேலும் பா.ஜ.க.வின் அரசியலின் அடிப்படை இந்துத்துவா மற்றும் கே.சி.ஆரின் அரசியலில் முஸ்லிம் வாக்காளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 

ஹைதராபாத்தில் அசாதுதீன் ஒவைசிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது

தெலுங்கானாவில், குறிப்பாக ஹைதராபாத்தில் பல இடங்கள் உள்ளன. அதில் முஸ்லிம் வாக்காளர்கள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தெலுங்கானாவில் பிஆர்எஸ் மற்றும் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் அதாவது ஏஐஎம்ஐஎம் இடையே கூட்டணி உள்ளது.  ஐதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அசாதுதீன் ஒவைசிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. ஒவைசி போன்ற செல்வாக்கு மிக்க பங்காளியை விட்டுவிட்டு ஆதரவைத் தேடி பாஜகவுடன் செல்ல பிஆர்எஸ் முடிவு எடுப்பாரா? என்பதும் சந்தேகமே.

மேலும் படிக்க - Caste Census | மண்டல் 2.0: மாற்றம் வருமா? பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு! அஞ்சும் பாஜக!

லோக் சபா, உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு

2018 சட்டமன்றத் தேர்தலில் ஏழு சதவீத (6.98%) வாக்குகளைப் பெற்று பாஜக ஒரு இடத்தை கைப்பற்றியது. 22 சட்டமன்றத் தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். மக்களவைத் தேர்தலில் பாஜக 20 சதவீத (19.65%) வாக்குகளைப் பெற்று 4 இடங்களில் வெற்றி பெற்றது. கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலிலும், பாஜக 34 சதவீத வாக்குகளைப் பெற்று, 150 வார்டுகளில் 48 வார்டுகளில் வெற்றி பெற்றது. 

மன உறுதியுடன் இருக்கும் பாஜக தலைவர்கள்

லோக்சபா தேர்தல் 2019 மற்றும் 2020 உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜகவின் சிறப்பான செயல்பாடு பிஆர்எஸ் உட்பட பிற கட்சிகளுக்கு கவலையை அதிகரித்துள்ளது. இந்த இரண்டு தேர்தல்களிலும் சிறப்பாக செயல்பட்டதால், பாஜக தலைவர்களின் மன உறுதி அதிகமாக உள்ளது, அதே சமயம் கேசிஆரும் எச்சரிக்கையாக இருக்கிறார்.

மேலும் படிக்க - நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்த காரணம் என்ன? - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News