மக்களவைத் தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்.. இவர்தான் முக்கிய வேட்பாளர்

Lok Sabha Elections 2024: ஏற்கனவே 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ், இன்று 43 தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 12, 2024, 07:43 PM IST
மக்களவைத் தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்.. இவர்தான் முக்கிய வேட்பாளர் title=

Congress Candidates List: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 43 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார். அதில் அசாம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. 

காங்கிரஸ் வெளியிட்ட பட்டியலில் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் தொகுதியில் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மகன் கெளரவ் கோகாய், ராஜஸ்தான் ஜலோரி தொகுதியில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா தொகுதியில் முன்னாள் முதல்வர் கமல் நாத் மகன் நகுல் நாத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இரண்டாவது பட்டியலில் உள்ள குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் ஆவார்கள் இவர்கள்.

மேலும், சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த ராகுல் கஸ்வான், சுரு தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அசாமின் நாகோன் தொகுதியில் இருந்து எம்.பி.யான பிரத்யுத் போர்டோலோய் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். குஜராத் எம்எல்ஏ ஜெனிபென் தாக்கூருக்கு பனஸ்கந்தா தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரோகன் குப்தா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் வெளியிட்ட இரண்டாவது 43 வேட்பாளர்கள் பட்டியலில், பொதுப்பிரிவை சேர்ந்த 10 வேட்பாளர்கள், ஓபிசி வகுப்பை சேர்ந்த 13 வேட்பாளர்கள், பட்டியல் சமூகத்தை சேர்ந்த 10 வேட்பாளர்கள்,  பட்டியல் பழங்குடிகள் சமூகத்தை சேர்த்த 9 வேட்பாளர்கள் மற்றும் மற்றும் 1 முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க - வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் - அறிவித்த ராகுல் காந்தி... அதிர்ச்சியில் பாஜக!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கடந்த வாரம்  முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இன்று மீண்டும் 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை வெளியிட்டது. முதல் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. 

முதல் பட்டியலில் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை வேட்பாளர்கள்?

முதல் பட்டியலில் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களை சேர்ந்த மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. முதல் பட்டியலில் கேரளாவில் 16 தொகுதிக்கும், கர்நாடகா வில் 7 தொகுதிக்கும், சட்டீஸ்கரில் 6 தொகுதிக்கும், தெலங்கானாவில்  4 தொகுதிக்கும், மேகாலயாவில் 2 தொகுதிக்கும், நாகாலாந்தில் 1 தொகுதிக்கும், சிக்கிம் மாநிலத்தில் 1 தொகுதிக்கும், லட்சத்தீவில் 1 தொகுதிக்கும், திரிபுராவில்  1 தொகுதிக்கும் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

2-ம் கட்ட பட்டியலில் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை வேட்பாளர்கள்?

இரண்டாம் கட்ட பட்டியலில் அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. மேலும் யூனியன் பிரதேசமான டையூ டாமன் தொகுதியும் அடங்கும். இன்றைய பட்டியலில் அசாமில் 12 தொகுதிக்கும், குஜராத்தில் 7 தொகுதிக்கும், மத்திய பிரதேசத்தில் 10 தொகுதிக்கும், ராஜஸ்தானில் 10 தொகுதிக்கும், உத்தரகாண்ட் 3 தொகுதிக்கும், டையூ டாமன் 1 தொகுதிக்கும் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும் படிக்க - மீண்டும் வயநாட்டில் ராகுல் காந்தி... 39 வேட்பாளர்கள் ரெடி - காங்கிரஸ் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News