காங்கிரஸ் கிளப்பியுள்ள சொத்து மறுபங்கீடு சாத்தியமா... உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன..!

காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவுக்கான தலைவர் சாம் பித்ரோடா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சொத்துகள் மறுபங்கீடு கொள்கை  இந்தியாவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், சாம் பித்ரோடாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2024, 02:50 PM IST
  • தனியாருக்கு சொந்தமான சொத்தை அரசு சொத்து மறுபங்கீடு செய்யலாமா?
  • உச்ச நீதிமன்ரத்தின் முன் உள்ள வழக்கு.
  • சமூக வளங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான சொத்துக்கும் இடையே வேறுபாடு இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கிளப்பியுள்ள சொத்து மறுபங்கீடு சாத்தியமா... உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன..! title=

காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவுக்கான தலைவர் சாம் பிட்ரோடா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவில் பரம்பரை வரி சட்டம் உள்ளதாகவும், ஒருவர்  மறைவுக்கு பின் அவரால் முழு சொத்துகளையும் தனது வாரிசுகளுக்கு வழங்க முடியாது என்றும், அவர் ஈட்டிய சொத்துகளில் 45 சதவீதத்தை மட்டுமே, தனது வாரிகளுக்கு வழங்க முடியும் மீதமுள்ள 55 சதவீத சொத்துகளை அரசு எடுத்துக் கொள்ளும் என்றார். இந்தியாவில் இது போன்ற சட்டங்கள் இல்லை.  சொத்துகள் மறுபங்கீடு கொள்கை  இந்தியாவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், சாம் பித்ரோடாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

தனியாருக்கு சொந்தமான சொத்தை அரசு சொத்து மறுபங்கீடு செய்யலாமா என்ற அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், உச்ச நீதிமன்றத்திலும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை புதன்கிழமை முதல் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. குறிப்பிட்ட தனியார் சொத்துக்களை 'சமூகத்தின் பௌதீக வளங்கள்' என்று கருதினால், அவற்றை அரசு கையகப்படுத்தி மறுபங்கீடு செய்யலாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் 39(பி) யில் அதற்கான அம்சம் உள்ளது. 

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த முடிவை எடுக்க வேண்டும். புதன்கிழமையன்று, 'இன்றைய தலைமுறையினர் எதிர்கால சந்ததியினருக்கான நம்பிக்கையான இருக்கும் சமூக வளங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான சொத்துக்கும் இடையே வேறுபாடு இருக்க வேண்டும்' என்று நீதிமன்றம் கூறியது. சமூக சொத்துக்கள் இயற்கை வளங்களை உள்ளடக்கும் என்று தலைமை நீதிபதி கூறினார். 

இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, 'தண்ணீர், காடுகள் மற்றும் சுரங்கங்கள் போன்ற தனியார் சொத்துக்களுக்கு பிரிவு 39(பி) பொருந்தாது என்று கூற முடியாது.  அரசியலமைப்புச் சட்டம் "சமூக மாற்ற உணர்வை" கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், பொது நன்மைக்காக ஒரு தனிநபரின் தனிப்பட்ட சொத்தை சமூகத்தின் பொருள் வளங்களாகக் கருதி அரசு அதிகாரிகளால் கையகப்படுத்த முடியாது என்று கூறுவது "ஆபத்தானது" என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கூறியது. ஆனால், ஒருவருடைய தனிச் சொத்தைப்  பிரிக்கும் நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்றார்.

குறிப்பாக 1960களில் நில உச்சவரம்புச் சட்டங்களை அமல்படுத்திய போது, நில மறுபங்கீடு தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் தொடர்பாகவும் உச்ச நீதி மன்ற விவாதத்தில் மேற்கோள் காட்டப்பட்டது. பொது நோக்கங்களுக்காக நிலத்தை அரசு கையகப்படுத்துதல் மற்றும் பகிர்வுக்கான தனியார் சொத்து உரிமைகள் மீதான சாத்தியமான மீறல் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க | தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை?

உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்கு

தற்போது உச்ச நீதிமன்ரத்தின் முன் உள்ள வழக்கு, 1986 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டுச் சட்டம், 1976 (MHADA) என்னும் சட்டத்தின் கீழ் மும்பையில் 'கையகப்படுத்தப்பட்ட' சொத்துக்களின் உரிமையாளர்கள் தொடுக்கப்பட்டது ஆகும். மும்பையில் பல பழமையான, பாழடைந்த கட்டிடங்களில் மக்கள் வசித்து வந்த நிலையில், MHADA சட்டம் 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.  MHADA சட்டத்தின் மூலம் அத்தகைய கட்டிடங்களில் வசிக்கும் மக்களிடம் இருந்து செஸ் வசூலிக்கப்பட்டு, இந்த பணம் கட்டிடத்தின் பழுது மற்றும் புனரமைப்புக்கு பயன்படுத்தப்பட்டது.

1986 ஆம் ஆண்டில், பிரிவு 1A பிரிவு 39(b) பிரிவுகள் MHADA சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இப்பிரிவின் மூலம், நிலங்கள் மற்றும் கட்டடங்களை கையகப்படுத்தி, 'தேவையுள்ளவர்களுக்கு', 'அத்தகைய நிலங்கள் மற்றும் கட்டடங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு' மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சட்ட திருத்தம் மூலம் அத்தியாயம் VIII-A சட்டத்தில் சேர்க்கப்பட்டது. 70% குடியிருப்பாளர்கள் கோரினால், மாநில அரசு செஸ் வரி வசூலிக்கப்பட்ட கட்டிடங்களை (மற்றும் அவை கட்டப்பட்ட நிலத்தை) கையகப்படுத்த அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சங்கம் MHADA இன் அத்தியாயம் VIII-A பிரிவை எதிர்த்து பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இது அம்சம் பிரிவு 14-ன் கீழ் உள்ள சமத்துவ உரிமையை மீறுகிறது என்று வாதிட்டார். உயர் நீதிமன்றத்திடம் இருந்து நிவாரணம் கிடைக்காததால், மனுதாரர்கள் 1992 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றனர்.

பிரிவு 39(பி) இல் குறிப்பிடப்பட்டுள்ள 'சமூகத்தின் பௌதீக வளங்கள்' தனியார் வளங்களை உள்ளடக்கியதா இல்லையா என்பது உச்ச நீதிமன்றத்தினால், எழுப்பப்பட்ட அடிப்படைக் கேள்வியாகும் - இதில் செஸ் வரி வசூலிக்கப்பட்ட கட்டிடங்களும் அடங்கும். மார்ச் 2001 இல், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட பிரிவிற்கு மாற்றியது. பிப்ரவரி 2002 இல், நீதிபதி ஐயரின் விளக்கத்தை ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஏற்றுக்கொண்டது, ஆனால் வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அதே பெஞ்ச் இப்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

அரசியலமைப்பின் 39(பி) பிரிவில் என்ன எழுதப்பட்டுள்ளது?

பிரிவு 39(b) அரசியலமைப்பின் பகுதி IV இல் கொடுக்கப்பட்டுள்ள 'மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளின்' கீழ் வருகிறது. இதன்படி, 'சமூகத்தின் பொருள் வளங்களின் உரிமையையும் கட்டுப்பாட்டையும் மக்களின் பொது நலனுக்கு உகந்த வகையில் பகிர்ந்தளிக்கும்' கொள்கையை உருவாக்குவது அரசின் கடமையாகும். கோட்பாடுகள் வழிகாட்டுதலுக்காக மட்டுமே, எந்த நீதிமன்றத்திலும் நேரடியாகப் அமல் பயன்படுத்த முடியாது.

1977 முதல், உச்ச நீதிமன்றம் 39(பி) சட்டப்பிரிவை பலமுறை விளக்கியுள்ளது. 1977 இல், கர்நாடகா vs ஸ்ரீ ரங்கநாத ரெட்டி வழக்கில், 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பிரிவு  அளித்த தீர்ப்பில், தனியாருக்குச் சொந்தமான வளங்கள் 'சமூகத்தின் பௌதீக வளங்கள்' வரம்பிற்குள் வராது என கூறப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி கிருஷ்ண ஐயரின் கருத்து பின்னர் மிக முக்கியமானதாக நிரூபிக்கப்பட்டது.

சமூகத்தின் பொருள் வளங்களில் தனியார் சொத்துக்களையும் கணக்கிட வேண்டும் என்று நீதிபதி ஐயர் கூறியிருந்தார். 1983 இல், சஞ்சீவ் கோக் உற்பத்தி நிறுவனம் எதிராக பாரத் கோக்கிங் நிலக்கரி வழக்கில், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நீதிபதி ஐயரின் விளக்கத்தை அங்கீகரித்தது. நீதிபதி ஐயரின் விளக்கம் 1996 ஆம் ஆண்டு மஃபத்லால் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் எதிராக யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் பயன்படுத்தப்பட்டது.

சொத்து மறுபங்கீடு தொடர்பாக அரசியல் குழப்பம்

தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. வாக்காளர்களை கவர, 'வாரிசு வரி' பிரச்னையை, பிரதான எதிர்க்கட்சியான, காங்கிரஸ் எழுப்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அனைவரது சொத்துக்களும் ஆய்வு செய்யப்படும் என்று முதலில் ராகுல் காந்தி கூறினார். யாரிடம் எவ்வளவு சொத்து உள்ளது என்பது கண்டுபிடிக்கப்படும். பின்னர் பகிர்ந்து அளிக்கப்படும். அதன் பின்னர் காங்கிரஸின் சாம் பிட்ரோடா அறிக்கை கொடுத்தது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிட்ரோடா 'பரம்பரை வரி'க்கு ஆதரவாக வெளிப்படையாக பேசினார். 

காங்கிரஸ் தலைவர்களின் இந்த அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடியும், ஆளும் பாஜகவும் பெரிய அளவில் விமர்சனம் செய்து வருகின்றனர். மக்களின் சொத்துக்கள் மற்றும் உரிமைகளை பறிக்கும் ஆபத்தான எண்ணம் காங்கிரஸுக்கு உள்ளது என்று மோடி கூறினார். எனினும், பிட்ரோடாவின் கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் விலகி உள்ளது.

மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்... 26 வயது இளைஞர் உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News