விஸ்தாரா நெருக்கடி... 10% விமானங்கள் ரத்து... சிக்கலில் விமான பயணிகள்!

Vistara Airlines Crisis: டாடா குழுமத்தின் விமான போக்குவரத்து நிறுவனமான விஸ்டாரா கடந்த வாரம் முதல் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், விமானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த மாதம் முழுவதும் 10 சதவீத விமானங்களை ரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2024, 02:57 PM IST
  • விஸ்தாரா நிறுவனத்தால் தினமும் குறைந்தது 350 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
  • தினமும் 25-30 விமான சேவைகளை ரத்து செய்வது குறித்து விஸ்தாரா பரிசீலித்து வருகிறது.
  • மற்ற விமானங்களில் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விஸ்தாரா நெருக்கடி... 10% விமானங்கள் ரத்து... சிக்கலில் விமான பயணிகள்! title=

Vistara Airlines Crisis: டாடா குழுமத்தின் விமான போக்குவரத்து நிறுவனமான விஸ்டாரா கடந்த வாரம் முதல் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், சிரமங்களை தவிர்க்க விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. விமானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த மாதம் முழுவதும் 10 சதவீத விமானங்களை ரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. விமானத்தில் பயணிக்க திட்டமிட்டுள்ள மக்களுக்கு இதனால், பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால், விமான பயணிகள் கட்டண உயர்வையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தினமும் 25-30 விமான சேவைகளை ரத்து செய்ய பரிசீலனை

விஸ்தாரா நிறுவனத்தால் தினமும் குறைந்தது 350 விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான சேவையை குறைக்கும் தற்போதைய முடிவினால், தினமும் 25-30 விமான சேவைகளை ரத்து செய்வது குறித்து விஸ்தாரா (Vistara Airlines) பரிசீலித்து வருகிறது. விமானிகள் பற்றாக்குறை மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன என விஸ்தாரா நிறுவனம் கூறியுள்ளது.

கோடை காலத்தில் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்க திட்டம்

முன்னதாக, மார்ச் 31 முதல் கோடை காலத்தில் தினமும் 300க்கும் மேற்பட்ட விமானங்களை விஸ்தாரா இயக்க திட்டமிட்டிருந்தது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், எங்கள் விமான சேவைகளை ஒரு நாளைக்கு சுமார் 25-30 விமானங்களாகக் குறைக்கிறோம் என்று கூறினார். இது நமது தினசரி சேவையில் 10 சதவீதம் ஆகும். 

மேலும் படிக்க | விஸ்தாரா நெருக்கடி... 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து... விளக்கம் கேட்கும் DGCA!

உள்நாட்டு விமான சேவை

விஸ்தார விமான நிறுவனம் இது குறித்து மேலும் கூறுகையில், உள்நாட்டு நெட்வொர்க் சேவையில் தான் விமான சேவை ரத்து இருக்கும் என்றும், வாடிக்கையாளளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க முன்கூட்டியே தகவல் அளிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் ஏற்கனவே மற்ற விமானங்களில் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் CEO கூறியுள்ள தகவல்

இந்த வார தொடக்கத்தில், பல விமானிகளின் உடல்நலக்குறைவு காரணமாக, நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான விமானங்களை ரத்து செய்தது. வெள்ளிக்கிழமை, விஸ்தாரா தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) வினோத் கண்ணன் கூறுகையில், ஏர் இந்தியாவுடன் இணைக்கும் பணியை டாடா குழும விமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்றும், விமான சேவைகளை தடையின்றி வழங்கும் ஒரு முயற்சியாக, விமானிகள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக விமான சேவைகளை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார். மே மாதத்திற்குள் நிலைமை சீராகி விடும் என்று நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

ஏர் இந்தியாவுடன் இணையும் விஸ்தாரா

விஸ்தாரா ஏர்லைன்ஸ் ஒரு டாடா குழும நிறுவனம். அது டாடா குழுமத்தின் மற்றொரு விமான நிறுவனமான ஏர் இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், விஸ்தாரா ஏர்லைன்ஸின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பிப்ரவரியில் சராசரியாக 49 சர்வதேச மற்றும் 273 உள்நாட்டு விமானங்களை இயக்கி வந்த நிலையில், மார்ச் மாதத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உட்பட கூடுதல் விமானங்களை விஸ்தாரா அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  உலகிலேயே இந்தியாவில் மிக மலிவான விமான கட்டணங்கள்: ஆகாசா ஏர் நிறுவனத்தின் CEO

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News