இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் எச்சரிக்கை! இந்த பரிகாரங்களால் நிம்மதி கிடைக்கும்

புதன் சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதற்கான பரிகாரங்களும் உண்டு. பரிகாரங்கள் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ளலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 6, 2022, 09:23 AM IST
  • துர்க்கை, விநாயகர் மற்றும் பெருமாள் வழிபாடு
  • மரகத மோதிரத்தை சுண்டு விரலில் அணியவும்.
  • பச்சை நிற பொருட்களை பயன்படுத்தவும்
இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் எச்சரிக்கை! இந்த பரிகாரங்களால் நிம்மதி கிடைக்கும் title=

புதுடெல்லி:  ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. ஜாதகத்தில் சூரியன் எப்படி முக்கியமோ அதே போல புதன் கிரகமும் முக்கியமானது. ஜாதகத்தில் புதன் கிரகம் சுப ஸ்தானத்தில் இல்லை என்றால் ஒருவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. 

அதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தில் புதனை (Planet Mercury) இளவரசன் என்று அழைக்கிறார்கள். ஜாதகத்தில் அசுபமான புதன் வலுப்பெறுவதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதன் கிரகத்தை எப்படி வலிமையாக்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேச்சுத்திறமைக்கு காரணகர்த்தா புதன் கிரகம் ஆகும்.  புதன் சுப ஸ்தானத்தில் இருக்கும்போது புத்தி கூர்மையாகிறது, பேச்சால் லாபமும், நற்பெயரும் கிடைக்கும். அதுமட்டுமல்ல, புதன் கிரகம் கல்வி, குழந்தைகள் மற்றும் வணிகத்திற்கும் காரணியாக உள்ளது. 

அதுவே, புதன் கிரகம் நீச்சத்தில் இருந்தால்? என்ன நடக்கும் தெரியுமா? புத்தி மங்குகிறது, சருமப் பிரச்சனைகள் ஏற்படும். இவை பொதுவானவை. அவரவர் ஜாதகத்திற்க்கு ஏற்றாற்போல, சிக்கல்களும், பிரச்சனைகளும் மாறுபடும்.  

ALSO READ | 2022-ல் சனி மற்றும் ராகு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்

புதன் கிரகம் 

கிரகங்களில் அதிபதி புதன், சூரியனுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறது. புதனும் சூரியனும் (Mercury and Sun) ஜாதகத்தில் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறார்கள். ஒருவரின் ஜாதகத்தில், 4, 6, 8 மற்றும் 12வது வீட்டில் புதன் அமர்ந்திருப்பது சுப பலன்களைத் தராது. 

மறுபுறம், புதன் கிரகத்தின் மீது, சனி மற்றும் ராகு பார்வை இருந்தால், அசுப பலன்கள் கிடைக்கும். இதுதவிர கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்றும், அதுவே மீனத்தில் வலுவிழந்து இருந்தால், அனைத்து வேலைகளையும் கெடுக்கும். மேலும், புதன் மேஷம், கடகம், மரம், தனுசு ஆகிய ராசிகளில் இருந்தால் அது அசுபம் அதாவது புதன் நீச்சம் பெற்றிருக்கிறார் என்று சொல்வார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் புதன் அசுபமாக இருந்தால், அதை சுபமாக மாற்ற செய்யவேண்டிய பரிகாரங்கள்

ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காட்டி, அறிவுரை பெற்று மரகத ரத்தினத்தை அணியுங்கள்

புதன்கிழமை நாளன்று வெள்ளி அல்லது தங்கத்தில் செய்யப்பட்ட மரகதம் பொருத்திய மோதிரத்தை அணியவும்

மரகத மோதிரத்தை சுண்டு விரலில் அணியவும்.

பச்சை நிற பொருட்களை அதிகபட்சமாக பயன்படுத்தவும்.

ALSO READ | மகரத்தில் புதன் சஞ்சாரம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அட்டகாசம்

துர்க்கை, விநாயகர் மற்றும் பெருமாளை தவறாமல் வணங்குங்கள்.

புதன் கிழமையன்று வரும் பவுர்ணமியன்று, சர்க்கரை மற்றும் ஏலக்காய் தானம் செய்வதும், பசுவிற்கு தீவனம் கொடுப்பதும் நல்லது. 

புதன் கிழமையன்று பெண்களுடன் வம்பு வழக்கு வைத்துக் கொள்ள வேண்டாம். அன்று பெண்களை வணங்குவதும், பச்சைப் பொருட்களை தானம் செய்வதும் புதனின் கடைக்கண் பார்வையை உங்கள் மீது படிய வைக்கும்.

ALSO READ | 2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News