அஸ்தமனமாகும் புதன் இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார்: உங்க ராசி என்ன?

Astrology: புதன் அஸ்தமத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 12, 2022, 05:59 PM IST
  • ஜோதிடத்தில் கிரகங்களின் எழுச்சி மற்றும் அஸ்தமனம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
  • புதன் கிரகம் அஸ்தமாவதால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தமனமாகும் புதன் இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார்: உங்க ராசி என்ன? title=

மே 13-ம் தேதி புதன் அஸ்தமனமாகிறது. ஜோதிடத்தில் கிரகங்களின் எழுச்சி மற்றும் அஸ்தமனம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புதன் கிரகம் அஸ்தமாவதால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். 

புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், பேச்சு, கணிதம், புத்திசாலித்தனம் மற்றும் நட்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது. புதன் அஸ்தமத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | வல்வினைகளை நீக்கும் மோகினி ஏகாதசியும் ஹர்ஷன யோகமும் சேர்ந்த சுபதினம் இன்று 

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும். தாயிடமிருந்து பணம் பெறலாம். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் நல்ல பலன்களை அளிக்கும். 

இந்த காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவு ஆகியவை கிடைக்கும். வருமானம் பெருகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆடை முதலியவற்றின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். படிப்பதில் ஆர்வம் இருக்கும். கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு இது நல்ல நேரம்.

குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வீட்டில் ஆன்மீகப்பணிகள் நடக்கும். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உற்சாகமும் இருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் விரிவாக்கம் கூடும். இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்த இடமாற்றம் லாபத்தை அள்ளித்தரும், மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மன நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். வருமானமும் அதிகரிக்கும். இருப்பிட மாற்றமும் சாத்தியமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கும்ப ராசியில் சனி; பஞ்ச மகாபுருஷ யோகத்தினால் பாதிக்கப்படும் ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News