தலைமுடிக்கு எண்ணெய் தடவுகிறீர்களா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது முடிக்கு ஆழமாக ஊட்டமளித்து முடி உதிர்வை தடுக்கிறது. உங்கள் தலைக்கு ஏற்ற எண்ணெய்யை தேர்வு செய்ய வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Jan 3, 2024, 01:51 PM IST
  • குளிர்காலத்தில் முடி உதிர்வு ஏற்படுகிறது.
  • ரசாயண பொருட்களை பயன்படுத்த கூடாது.
  • அதிக ஹீட்டிங் செய்ய கூடாது.
தலைமுடிக்கு எண்ணெய் தடவுகிறீர்களா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!  title=

தற்போது குளிர்காலம் வந்துவிட்டது. குளிர்ந்த காற்று தலைமுடிக்கு சேதம் விளைவிக்கும். கடுமையான வானிலை முடியின் வேர்களை சேதப்படுத்துகிறது, அவற்றை மந்தமாகவும் கரடுமுரடானதாகவும் மாற்றுகிறது. மேலும் அடிக்கடி ஹேர் ஸ்டைலிங் செய்வது, தலைமுடிக்கு ரசாயனங்கள், கலரிங், ட்ரையர் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது முடியை சேதப்படுத்துகிறது. இந்த சேதத்திலிருந்து முடியை பாதுகாக்க எண்ணெய் ஒரு பயனுள்ள மற்றும் எளிமையான தீர்வாக இருக்கும். தலை முடிக்கு தேங்காய் எண்ணெய், கற்றாழை, ஆலிவ் போன்ற இயற்கைப் பொருட்களுடன் கூடிய ஹேர் ஆயில்கள் சிறந்த தேர்வுகளாகும். ஏனெனில் அவை முடி சேதத்தின் அறிகுறிகளை சரிசெய்ய உதவுகின்றன.

மேலும் படிக்க | இரத்தசோகை ஏற்பட்டால் வெளியும் தெரியும் அறிகுறிகள்! இரும்புச்சத்து குறைந்தா பேராபத்து

முடிக்கு எண்ணெய் தடவுவது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல் என்று கூறப்படுகிறது. உண்மையில், ஷாம்பு பயன்படுத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு எண்ணெய் தடவுவது, சேதத்தை சரிசெய்வதில் திறம்பட உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான, ஊட்டமளிக்கும் முடியை உங்களுக்கு வழங்கும். மேலும் எண்ணெய் தடவுவது பொடுகுத் தொல்லைக்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது.  தலையில் எண்ணெய் தடவுவது, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

தலையில் உள்ள பிரச்சனையை புரிந்துகொண்டு, அதற்கேற்ப ஹேர் ஆயிலைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். தேங்காய் எண்ணெய், கற்றாழை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்று இயற்கைப் பொருட்களின் கலவையுடன் செறிவூட்டப்பட்ட எண்ணெய் வறண்ட குளிர்காலம், மாசுபாடு, தினசரி ஸ்டைலிங் மற்றும் இரசாயன சிகிச்சைகள் ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க உதவும்.

முடிக்கு எண்ணெய் தடவுவதால் ஏற்படும் நன்மைகள்

இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது: எண்ணெய் மசாஜ் மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தை அதிகரிக்கிறது, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  வழக்கமான எண்ணெய் தடவுதல், முடியின் தண்டை சரிசெய்து வலுப்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. எண்ணெய்கள் உறிஞ்சப்பட்டு மேற்பரப்பு சேதத்தை சரிசெய்து, முடியின் ஒட்டுமொத்த வலிமையை மேம்படுத்துகிறது. மேலும் எண்ணெய் தடவுவது முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் முடியை நிர்வகிக்க உதவுகிறது. கூடுதலாக, எண்ணெயின் மசகு பண்புகள் முடியை எளிதாகப் பிரிக்கின்றன, சீப்பு பயன்படுத்தும் போது உடைவதைத் தடுக்கின்றன.

சரியான எண்ணெய் மற்றும் ஷாம்பூவை எப்படி தேர்வு செய்வது?

தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வதற்கான எளிய 2-படி செயல்முறை, சரியான பொருட்களை கொண்ட மென்மையான கழுவுதல் ஆகியவை குளிர்காலத்தில் முடியின் மேற்பரப்பு சேதத்தை சரிசெய்ய உதவும். அலோ வேரா, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் என இந்த மூன்று பொருட்கள் கலந்த ஒரு ஹேர் ஆயில் மற்றும் ஷாம்பூவைத் தேர்ந்தெடுப்பது, முடியின் மேற்பரப்பு சேதத்தை சரிசெய்வதில் திறம்பட உதவும். தேங்காய் எண்ணெய் முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது, ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அலோ வேரா ஆழமான கண்டிஷனிங் வழங்கவும், வறட்சி மற்றும் முடி உடைவதைக் குறைக்கவும் உதவுகிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் முடிக்கு வலிமையான மற்றும் ஊட்டமளிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | எச்சரிக்கை! நுரையீரல் ரொம்ப வீக்கா இருப்பதை உணர்த்தும் ‘சில’ அறிகுறிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News