6 கிரகங்களின் சேர்க்கை, இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது

செவ்வாய்-சுக்கிரன், புதன்-சனி, சூரியன்-வியாழன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தர உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2022, 02:46 PM IST
  • நல்ல செய்தி கிடைக்கும்
  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்
  • தொழிலில் வருமானம் அதிகரிக்கும்
6 கிரகங்களின் சேர்க்கை, இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது title=

புதுடெல்லி: ஜோதிடத்தின் கணக்கீட்டின்படி, இந்த நேரத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் தனுசு ராசியில் உள்ளனர். அதேசமயம் புதனும் சனியும் மகர ராசியில் உள்ளன. இது தவிர சூரியனும் வியாழனும் கும்ப ராசியில் பெயர்ச்சி நிலையில் உள்ளனர். செவ்வாய்-சுக்கிரன், புதன்-சனி, சூரியன்-வியாழன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தருகிறது. எனவே புதன், சனி, சூரியன் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாற்றப்போகிறது என்பதை பார்ப்போம்.

6 கிரகங்களின் சேர்க்கையால் எந்த ராசிக்கு அதிக பலன்

மேஷம்: உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் இடம் மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பேச்சில் இனிமை இருக்கும்.

மேலும் படிக்க | பிப்ரவரி 27 முதல் சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசிகள்! ரிஷபத்திற்கு சூப்பர் யோகம் 

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வம் பெருக வாய்ப்புள்ளது.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிட மாற்றம் சாத்தியமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்: மன நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான வேலைகள் நிறைவேறும். செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் பணம் செலவாகும்.

சிம்மம்: மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உத்யோகத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும்.

கன்னி: வியாபாரத்தில் பண லாபம் உண்டாகும். தினசரி வருமானம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்: பொறுமையுடன் இருங்கள். பங்குதாரரால் நிதி ஆதாயம் உண்டாகும். குடும்பக் கடமைகள் நிறைவேறும். பெற்றோரின் நிதி உதவியைப் பெறலாம்.

தனுசு: கலைத்துறையில் போக்கு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரரின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும், விவாதம் தவிர்க்கப்பட வேண்டும். வருமானம் கூடும்.

மகரம்: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். பயணங்களால் பண இழப்பு ஏற்படலாம்.

கும்பம்: உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். 

மீனம்: மன அமைதி பெறுவீர்கள். மகிழ்ச்சிக்கான வழிகளில் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சமயப்பணிகள் நடைபெறும்.

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்ககளுக்கு சவாலாக இருக்கலாம், ஜாக்கிரதை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News