வெளிநாட்டு ரசிகையுடன் நடனமாடும் அஜித்குமார்! வீடியோ இதோ..

Ajith Kumar Dancing Viral Video: நடிகர் அஜித்குமார், வெளிநாட்டு ரசிகை ஒருவருடன் நடனமாடும் வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Yuvashree | Last Updated : Jan 3, 2024, 03:21 PM IST
  • அஜித்குமார் புத்தாண்டினை துபாயில் கொண்டாடினார்.
  • அப்போது ஒருவருடன் நடனமாடினார்.
  • இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வெளிநாட்டு ரசிகையுடன் நடனமாடும் அஜித்குமார்! வீடியோ இதோ.. title=

அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படப்பிடிப்பில் பிசியாக இருந்த அஜித்குமார், தற்போது துபாயில் உள்ளார். இவர், அங்கு ஒரு ரசிகையுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார்:

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கும் மேலாக  முன்னணி நடிகராக திகழ்பவர், அஜித்குமார். எந்த வித சினிமா பின்னணியும் இன்றி திரையுலகிற்குள் நுழைந்து, தனக்கான பாதையை உருவாக்கிய நடிகர்களுள் இவரும் ஒருவர். இவரது படங்கள் எப்போது வெளியானாலும் திருவிழா போல ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இவர், தற்போது விடாமுயற்சி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைப்பெற்று வருகிறது. 

துபாய் சென்ற அஜித் குமார்..

சமீபத்தில் 2024ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைக்கட்டியது. பலரும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியூர்-வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்காெண்டு புத்தாண்டை கொண்டாடினர். அந்த வகையில், நடிகர் அஜித்குமாரும் தனது மனைவியும் ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் புத்தாண்டை கொண்டாட துபாய் சென்றுள்ளார். 

மேலும் படிக்க | ரகுல் ப்ரீத் சிங்கிற்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

வைரலாகும் அஜித்தின் டான்ஸ் வீடியோ..

நடிகர் அஜித்குமார், பெரும்பாலும் கேமரோ, மொபைல் போன், பத்திரிக்கைகளின் கண்பார்வைகளில் இருந்து தள்ளியே இருப்பார். தான் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை பிறர் வெளியிடுவதை இவர் விரும்ப மாட்டார். இந்த நிலையில், இவர் உணவருந்திய விடுதியின் ஊழியரின் கையை பிடித்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில் அவர் நடித்திருந்த ‘துணிவு’ படத்தில் இருந்து ‘இருப்பது ஒரு லைஃப்பு அடிச்சிக்க சியர்ஸ்’ பாடல் ஒளிபரப்பாக, அதற்கு ஏற்றார் போல நடனமாடுகிறார். முதலில் அந்த பெண்ணின் கையை பிடித்து நடனமாடும் இவர், அதன் பிறகு கைத்தட்ட ஆரம்பித்து விட்டார். 

“நம்ப அஜித் சாரா இது…?”

நடிகர் அஜித்குமாரின் நகைச்சுவை குணமும், இயல்பான நடவடிக்கைகளையும் ரசிகர்கள் எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. ‘மங்காத்தா’ படத்தின் இறுதியில் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ப்ளூப்பர்ஸ் ஒளிபரப்பாகும். அந்த வீடியோவில்தான் அஜித் இந்த அளவிற்கு சிரித்து, ரசிகர்கள் பார்த்ததாகவும், அதற்கு பிறகு இப்போதுதான் அவர் இப்படி நடனமாடி, சிரித்து பார்ப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

விடாமுயற்சி படம் என்ன நிலையில் உள்ளது? 

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால், அப்போது நடிகர் அஜித்குமார் தனது அகில உலக டூரில் பிசியாக இருந்தார். இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதையடுத்து, அவர் அஜர்பைஜானில் நடைப்பெற்ற படப்பிடிப்பில் சில மாதங்களுக்கு முன்புதான் கலந்து கொண்டார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இறந்த போது, அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக தனது இறங்கலை அஜித் தெரிவித்தார். 

விடாமுயற்சி படப்பிடிப்பு, வெளிநாட்டில் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இதில் த்ரிஷா, அஜித்திற்கு ஜோடியாக நடிப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். 

மேலும் படிக்க | தனக்கு தாயாக நடித்தவரையே காதலித்த கமல்ஹாசன்! எந்த நடிகை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News