கார்த்திகை தீபம் அப்டேட்: ரம்யாவின் காதலனுக்காக காதல் கடிதம் எழுதிய தீபா.. ஐஸ்வர்யா செய்த சதி

Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 17, 2024, 12:54 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • வருத்தப்படும் அபிராமி.
  • மீனாட்சியிடம் சமாளிக்கும் ஆனந்த்.
கார்த்திகை தீபம் அப்டேட்:  ரம்யாவின் காதலனுக்காக காதல் கடிதம் எழுதிய தீபா.. ஐஸ்வர்யா செய்த சதி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்கு இனிமே யாரையும் பைக்கில் கூட்டிட்டு போகக்கூடாது என கண்டிஷன் போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது இரவு நேரத்தில் தீபா துணி துவைத்துக் கொண்டிருக்க அங்கு வந்த அபிராமி அந்த நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க அவரோட துணியை துவைச்சிட்டு இருக்கேன் நான் துவைக்கிறேன் என்று சொன்னேன் அவர் வேண்டாம் என்று சொல்லிட்டார் அதனால அவர் தூங்குற வரைக்கும் காத்திருந்து துவைச்சிட்டு இருக்கேன் என்று சொல்கிறாள். 

வருத்தப்படும் அபிராமி

இதைக் கேட்ட அபிராமி நீ எவ்வளவு நல்லவளா இருக்க உன்னை புரிஞ்சுக்காம நான் ரொம்ப உன்னை காயப்படுத்திட்டேன் என்று வருத்தப்படுகிறாள். மேலும் நான் என் புள்ளைங்கள சரியா வளக்கல என்று வருந்த தீபா ஆறுதல் சொல்ல இருவருக்கும் இடையேயான பிணைப்பு அதிகமாகிறது. 

அதன் பிறகு மறுநாள் காலையில் தீபா ரம்யாவை கோவிலில் சந்தித்து பேச ரம்யா சரியா சாப்பிட முடியல தூங்க முடியல என புலம்ப இது காதல் பண்ற வேலை என்று கலாய்க்கும் தீபா ரம்யாவின் காதலனுக்காக ஒரு காதல் கடிதத்தை கொடுத்து இதை உன் ஆள் கிட்ட கொடு கண்டிப்பாக உன்னை ஏத்துப்பான் என்று கொடுக்கிறாள். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்த ஐஸ்வர்யா தீபாவின் வாழ்க்கையில் விளையாட சரியான வாய்ப்பு கிடைத்திருப்பதாக நினைத்து சந்தோஷப்படுகிறாள். 

மீனாட்சியிடம் சமாளிக்கும் ஆனந்த் 

அடுத்ததாக ஆனந்த் வீட்டுக்கு வரும்போது தீபாவும் மைதிலியும் மீனாட்சி கோவிலுக்கு போய் இருக்காங்க அநேகமா அந்த மாப்பிள்ளை பார்க்க தான் நினைக்கிறேன். மீனாட்சி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவாங்க போல என்று பேசிக் கொண்டிருக்க இதை கேட்ட ஆனந்த் பதறி அடித்து கிளம்ப கார் ஸ்டார்ட் ஆகாமல் இருக்க ஒரு ஆட்டோவை பிடித்து கோவிலுக்கு வேக வேகமாக வருகிறான். கோவிலில் கல்யாணம் மீனாட்சிக்கு இல்லை என்று தெரிந்து அவன் நிம்மதி அடைய அங்கு வந்த மீனாட்சி என்ன பதறிட்டீங்க போல என்று கேட்க அப்படியெல்லாம் இல்லனா கோவிலுக்கு தான் வந்தேன் என்று சொல்லி சமாளித்து அங்கிருந்து கிளம்பி செல்கிறான். பிறகு தீபா ஆனந்துக்கு உங்க மேல காதல் இருக்கு என்பதை நிரூபிக்கிறாள்.
 
மறுபக்கம் தீபா கொடுத்த காதல் கடிதத்துடன் ஆபீஸ் வந்த ரம்யா அதை பைலுக்குள் வைத்து கார்த்தியிடம் கொடுக்க சொல்லி அனுப்ப உள்ளே வந்த ஐஸ்வர்யா அந்த தீபாவிடம் பணத்தை கொடுத்து இதை கார்த்தி இடம் கொடுக்காத நான் கொடுக்கிற லெட்டரை கார்த்திக் கொடுத்ததாக சொல்லி ரம்யாவிடம் கொடு கடிதம் ஒன்றை மாற்றி வைத்து அனுப்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஷாருக்கானுடன் மீண்டும் இணையும் அனிருத்.. வெளியானது மாஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News