சாய் பல்லவியை புகழ்ந்து தள்ளிய சமந்தா! வைரலாகும் பழைய வீடியோ..

Sai Pallavi, Samantha Viral Video: நடிகை சாய்பல்லவியும் சமந்தாவும் இருக்கும் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியாே, சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும். 

Written by - Yuvashree | Last Updated : Feb 22, 2024, 07:01 PM IST
  • சாய்பல்லவி-சமந்தா வைரல் வீடியோ!
  • இருவரும் தற்போது போட்டி நடிகைகளாக உள்ளனர்
  • இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
சாய் பல்லவியை புகழ்ந்து தள்ளிய சமந்தா! வைரலாகும் பழைய வீடியோ.. title=

Sai Pallavi, Samantha Viral Video : தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், சாய் பல்லவி. இவர், நாயகியாக ஆவதற்கு முன்பு, டிவி நிகழ்ச்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ க்ளிப் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

சாய் பல்லவி:

தென்னிந்திய திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர், சாய் பல்லவி. இவரை பலர், “அடக்கமான நடிகை” என்றும் கூறுவதுண்டு. காரணம், இவர் தான் நடிக்கும் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டுவதில்லை. இயற்கை அழகும், அதிக நடிப்பு திறமையும் இருக்கும் இவரை, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இவர், மலையாளத்தில் உருவான ‘பிரேமம்’ படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடத்திருந்த ‘மலர் டீச்சர்’ என்ற கதாப்பாத்திரம் அதிக ரசிகர்களை ஈர்த்தது. 

சாய் பல்லவி, தமிழில் தாம்தூம் படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தில் அவர் கண்டு கொள்ளப்படாத கதாப்பாத்திரமாக இருந்தாலும், பிரேமம் படத்திற்கு பிறகு இவரது மார்கெட் எக்கச்சக்கமாக எகிறியது. தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

டிவி நிகழ்ச்சிகளில் சாய் பல்லவி..

நடிகை சாய்பல்லவி, நடிகையாவதற்கு முன்பு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவருக்கு நடனம் மீது ஆர்வம் அதிகம் என்பதால், நடன நிகழ்ச்சிகளில்தான் அதிகமாக பங்கேற்றார். தமிழில் பிரபல தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான, நீங்களும் ஆகலாம் பிரபுதேவா நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தார். ஆனால் அவரால் இப்போட்டியில் இறுதிப்போட்டி வரை செல்ல முடியவில்லை. 

தமிழில் மட்டுமன்றி, பிற மொழிகளில் நடைப்பெற்ற நடன நிகழ்ச்சிகளிலும் சாய் பல்லவி பங்கேற்றிருக்கிறார். அப்படி, ஒரு நிகழ்ச்சியில் சாய் பல்லவி பங்கேற்ற போது அவரை சமந்தா பாராட்டியிருக்கிறார். இது குறித்த வீடியாே தற்போது இணையதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

மேலும் படிக்க | அச்சு அசலாக அப்பாஸை போலவே இருக்கும் அவரது மகன்! வைரல் புகைப்படம் இதோ..

சாய் பல்லவியை புகழந்த சமந்தா..

தற்போது வைரலாகும் வீடியோவிலிருந்து சாய் பல்லவி பங்கேற்றிருந்த நடன நிகழ்ச்சியில் சமந்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார் என்பது தெரிகிறது. சாய் பல்லவியின் நடனம் குறித்து இதில் பேசும் சமந்தா, “உங்கள் நடனத்தை பார்த்து வியந்தேன். நீங்கள் ஆடிய அந்த ஸ்டெப் மிகவும் நன்றாக இருந்தது. அனைவரும் உங்களை போல அழகாக நடனமாட முடிந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறுகிறார். அதற்கு சாய் பல்லவி வெட்கப்பட்டு சிரித்து, நன்றி கூறுகிறார்.

இந்த வீடியோவை, ரசிகர்கள் #Onceuponatime என்ற ஹேஷ்டேக்குடன் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

போட்டி நடிகைகள்..

அப்போது சாய் பல்லவியின் நடன நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற சமந்தா, இன்று அவருக்கு போட்டி நடிகையாக இருக்கிறார். சமந்தா தெலுங்கு, இந்தி, தமிழ் என மும்மொழி படங்களில் நடிக்க, சாய் பல்லவி மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர், விரைவில் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படம்! இயக்குநர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News