Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..

Latest News Suriya Son Dev : நடிகர் சூர்யாவின் மகன் தேவ், தனது தந்தை சூர்யாவை பெருமைப்படுத்தும் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறார். அது என்ன செயல் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Apr 21, 2024, 04:44 PM IST
  • சூர்யாவை பெருமை படுத்திய அவரது மகன்
  • சூர்யாவிற்கு தியா என்ற இன்னொரு மகளும் இருக்கிறார்
  • மும்பையில் செட்டிலானாரா சூர்யா?
Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க.. title=

Latest News Suriya Son Dev : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், நடிகர் சூர்யா. இவருக்கு தியா-தேவ் என ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இதில், அவரது மகன் தேவ் செய்த ஒரு செயல் இணையத்தில் வைராகி வருகிறது.

சூர்யா-ஜோதிகாவிற்கு இரண்டு பிள்ளைகள்..

சுமார் 27 வருடங்களாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வருபவர், நடிகர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனான இவர் அறிமுகமானது ‘நேருக்கு நேர்’ படம் மூலமாகத்தான். தொடர்ந்து சாஃப்ட் பாய் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது பெரிய பட்ஜெட் படங்களின் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். 

நடிகை ஜோதிகாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஆரம்பித்து, சில்லுனு ஒரு காதல் படம் வரை 7 படங்களில் ஒன்றாக நடித்திருந்தார். இதற்கிடையே இவர்களுக்குள் காதல் மலர, 2006 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தை 2007ஆம் ஆண்டும் தேவ் என்ற ஆண் குழந்தை 2010ஆம் ஆண்டும் பிறந்தன. 

மும்பையில் செட்டில் ஆன சூர்யா? 

நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் தனது அப்பா-அம்மாவுடன் தங்கியிருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் மும்பையில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள ஒரு பிரபல ஏரியாவில், அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களின் இல்லம் இருக்கிறதாம். 

தந்தையை பெருமைப்படுத்திய சூர்யாவின் மகன்..

சூர்யா-ஜோதிகாவின் மகளன் தேவிற்கு தற்போது 14 வயதாகிறது. இந்த சமயத்தில் இவர் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவ், கராத்தேவில் ப்ளாக் பெல்ட் பெற்றிருக்கிறார். இது குறித்து வைரலாகும் அந்த வீடியாேவில் அவர் தனது தந்தையுடன் கைக்குலுக்கும் காட்சியும், தன் மகனையும் சேர்த்து பிற கராத்தே பயிலும் மாணவர்களையும் சூர்யா கைக்குலுக்கி பாராட்டும் காட்சியும் இடம் பெற்றிருக்கின்றன. 

Suriya Son Dev

திரை பிரபலங்களின் குழந்தைகள் பலர், வளர்ந்தவுடன் சினிமாவிற்கு நடிக்க வரும் சமயத்தில், தற்போது நடிகர் சூர்யாவின் மகன் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே போல நடிகர் மாதவனின் மகன் வேதாந்தும், உலக அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பதக்கங்கள் வென்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | விஜய், விஷால் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - இயக்குனர் ஹரி!

கங்குவா படத்தில் பிசியான சூர்யா..

நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், த்ரில்லர்-ஃபேண்டசி பாணியில் உருவாக்கப்படுவதால் இதன் மீதுள்ள எதிர்பார்ப்பு பலருக்கு அதிகரித்திருக்கிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதன் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானதை தொடர்ந்து இதன் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பதானி கதாநாயகியாகவும் பாபி டியோல் வில்லனாகவும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கங்குவா திரைப்படம், இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சூர்யா, இதையடுத்து தனது பாலிவுட் பயணத்தையும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூரரை போற்று படத்தின் இந்தி ரீ-மேக்கில் கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கும் அவர், ஒரு பெரிய பாலிவுட் இயக்குநரின் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கங்குவா படத்தின் ரிலீஸிற்கு பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாகும் த்ரிஷா! 40 வயதிலும் டாப் நடிகையாக இருப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News