“வாரிசு படம் மாதிரி இருக்கே..” GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்!

Latest News GOAT Movie Update : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் GOAT படத்தின் அப்டேட் இன்று வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள், இப்படாம் வாரிசு படத்தை நினைவூட்டுவதாக கூறி வருகின்றனர். 

Written by - Yuvashree | Last Updated : May 18, 2024, 11:00 AM IST
  • வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் GOAT திரைப்படம்
  • இன்று வெளியான அப்டேட்
  • ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்!
“வாரிசு படம் மாதிரி இருக்கே..” GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்! title=

Latest News GOAT Movie Update : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், The Greatest Of All Time. இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, இயக்குநர் விக்ரம் பிரபு இது குறித்த அப்டேட்டை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்:

இயக்குநர் வெங்கட் பிரபு, இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், GOAT படத்தின் VFX பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், இதன் அவுட்புட்டை பார்க்க காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில் அவர் விஜய்யின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் உடனே இந்த அப்டேட்டை வைரலாக்க தொடங்கினர். 

 

ஒரு சில ரசிகர்கள் இந்த போட்டோவை பார்த்தால் வாரிசு படத்தின் நியாபகம் வருவதாக கூறியிருக்கின்றனர். 

Varisu VFX

இன்னும் சிலர், விஜய் படத்தில் கிரீன் மேட்டை பார்த்தாலே பயமாக இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். காரணம் விஜய் நடித்த கிராஃபிக்ஸ் காட்சிகளில் நடித்த படங்கள் சரியாக ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றதில்லை. இதனாலேயே ரசிகர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர். 

வெளிநாட்டில் நடைபெறும் வேலைகள்!

GOAT படத்தின் வேலைகள், தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைப்பெற்று வரும் VFX பணிகளும் கூட, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகானத்தில் நடைப்பெற்று முடிவடைந்தது. இதில், அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளில் பணியாற்றிய கலைஞர்கள் வேலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எக்கச்சக்கமாய் கூடியிருக்கிறது. அது மட்டுமன்றி, நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து பல வருடங்கள் ஆகி விட்டது. இப்படத்தின் போஸ்டர்களி அவர் வயதானது போன்ற ஒரு தோற்றத்தையும், வயது குறைவாக இருப்பவரனின் தோற்றத்தையும் கொண்டிருக்கிறார். இதனால், இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.

மேலும் படிக்க | Vijayakanth: GOAT படத்தில் நடிக்கும் மறைந்த நடிகர் விஜயகாந்த்?

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் பல கோடி செலவில் உருவாகி வருகிறது. கிராஃபிக்ஸ் காட்சிகள், ஸ்டண்ட் காட்சிகள் என அனைத்திற்கும் எக்கச்சக்கமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யை வைத்து, நடிகர் விஜய் பெரிய ப்ளான் வைத்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இவர் மீதும் இப்படத்தின் மீதும் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

படக்குழு:

கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 90ஸ்களில் அனைவருக்கும் கனவுகண்ணனாக இருந்த பிரசாந்த் பல நாட்களுக்கு பிறகு கோட் படம் மூலம் கம் பேக் கொடுப்பதை பார்த்து ரசிகர்கள் ஆனந்தம் அடைந்து வருகின்றனர். அது மட்டுமன்றி, சமீபத்தில் வெளியான விசில் போடு பாடல், கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 50 மில்லியன் வியூஸ்களுக்கும் மேல் கடந்து சாதனை படைத்திருக்கிறது. 

மேலும் படிக்க | ‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News