மஞ்சுமெல் பாய்ஸ் மொக்கையா இருக்கா? ஓடிடியில் வெளியான பின்பு ரசிகர்கள் விமர்சனம்!

Manjummel Boys OTT Release : மலையாளத்தில் உருவாகி மாபெரும் ஹிட் அடித்த படம், மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, ரசிகர்கள் பலர் இதற்கு விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.   

Written by - Yuvashree | Last Updated : May 5, 2024, 02:57 PM IST
  • மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஓடிடியில் ரிலீஸ்
  • படத்தை விமர்சனம் செய்யும் ரசிகர்கள்
  • ஓவர் ரேட்டட் என ட்விட்டரில் கமெண்ட்
மஞ்சுமெல் பாய்ஸ் மொக்கையா இருக்கா? ஓடிடியில் வெளியான பின்பு ரசிகர்கள் விமர்சனம்!  title=

Manjummel Boys OTT Release : தமிழ்நாட்டில், கடந்த 5 மாதங்களாக வெளியான தமிழ் படங்கள் ஹிட் அடித்ததோ இல்லையோ, மலையாள படங்கள் பல சூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதிலும், ஒரு சில மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களை கவரும் நோக்கில், பாதி படத்தை மலையாளத்திலும் பாதி படத்தை தமிழ் டைலாக்குகள் வைத்தும் எடுக்கின்றனர். அந்த வகையில், தமிழ் மக்கள் பலரது கவனத்தை ஈர்த்த படம்தான், மஞ்சுமெல் பாய்ஸ். இப்படம், மே 5ஆம் தேதியான இன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், இதனை சுமார் ரகம் என கூறி வருகின்றனர். 

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்:

கொடைக்காணலுக்கு டூர் செல்லும் நண்பர்கள், குணா குகையை சுற்றி பார்க்க கிளம்புகின்றனர். அங்கு, பொது மக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகின்றனர். அப்போது, அந்த நண்பர்களுள் ஒருவர் குகைக்குள் பல அடி ஆழத்தில் விழுந்து விடுகிறார். அவர் உயிருடன் காப்பாற்றப்பட்டாரா இல்லையா? அவரின் நிலை என்ன? போன்ற கேள்விகள்தான் படத்தின் மீதி கதை. 

2006ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து கொடைக்காணலுக்கு வந்த நண்பர்கள் குணா குகையில் நேரே சந்தித்த சம்பவங்களை தழுவிதான், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சுபாஷ் என்பவர், குணா குகைக்குள் தவறி விழுந்து விட, அவரை காப்பாற்ற அவரது நண்பர் குட்டன் பல ஆயிரம் அடி குகைக்குள் நுழைந்து வீர செயலில் ஈடுபட்டார். இது பின்னாளில் பெரிதாக பேசப்பட்டு, பின்னர் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. இதை வைத்தும், கொஞ்சம் சாயம் பூசப்பட்டும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை, சிதம்பரம் எஸ்.பொடுவல் இயக்கியிருக்கிறார். மலையாள திரையுலகை சேர்ந்த பல இயக்குநர்கள் முயற்சி எடுத்தும், இந்த படத்தை பட்ஜெட் காரணங்களால் இயக்க முடியவில்ல. இறுதியில் இவர்கள் எடுத்த முயற்சிதான், படத்தை ஹிட் ஆக்கியது. 

மேலும் படிக்க | மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கழுவி ஊற்றிய ஜெயமோகன்! விமர்சனமா? வன்மமா?

மஞ்சுமெல் பாய்ஸ்

ஓடிடியில் வெளியீடு-ரசிகர்கள் விமர்சனம்:

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வெளியானது. ரிலீஸாகி கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு பிறகு இப்படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. மலையாளம் மட்டுமன்றி, தமிழ் மற்றும் இந்தி மொழியிலும் இப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். இந்த படத்தை பெரும்பாலானோர் தியேட்டரில் பார்த்திருந்தாலும், ஒரு சிலர் இதை ஓவர்-ரேட்டட் என கூறி வருகின்றனர். 

தற்போதைய காலக்கட்டத்தில், எந்த படம் வெளியானாலும் அதற்கு சமூக வலைதளங்களில் பாசிடிவான விமர்சனங்களுடன் போஸ்ட் போடப்படுகிறது. அதே போல, சில விமர்சகர்களும் காசை வாங்கிக்கொண்டு நன்றாக இல்லாத படங்களையும் நன்றாக இருப்பதாக கூறுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறது. ஆனால், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அப்படியில்லை. இந்த படம், குடும்ப ரசிகர்கள் மத்தியிலேயே நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால், இது குறித்து பலர் சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். இந்த நிலையில், இதை பார்த்து படத்தை “ஆஹோ ஓஹோ” என கற்பனை செய்து வைத்திருந்த சிலர், படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், சுமார்தான் என்றும் கூறுகின்றனர். இதற்கு எதிர் கருத்து தெரிவித்தும் ரசிகர்கள் பலர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ உண்மை கதை என்ன? குணா குகையில் அப்படி என்னதான் நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News