லியோ முதல் விடாமுயற்சி வரை..எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள தமிழ் படங்கள்

உலக நாயகனின் இந்தியன் 2  படம் முதல் அஜித்தின் விடாமுயற்சி வரை தமிழ் சினிமாவை அடுத்த லெவலிற்கு கொண்டு போகும் வகையில் பல திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 1, 2023, 06:58 PM IST
  • லியோ, கைதி2, இந்தியன் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
  • அஜித்தின் பிறந்தநாளையொட்டி படக்குழு புது படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
  • இந்த தீபாவளிக்கு பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ முதல் விடாமுயற்சி வரை..எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள தமிழ் படங்கள் title=

பாலிவுட்டில் வெளிவரும் ஆக்ஷன்-காதல் திரைப்படங்களை தமிழில் ரீ-மேக் செய்து வெளியிடும் காலம் என்றோ மலையேறிவிட்டது. சமீப காலங்களில் இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவில் பேசப்படும் அளவிற்கு கோலிவுட் படங்கள் வளர்ந்து விட்டன. அதற்கு காரணம், திறமையான புதுமுகங்கள் பலர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்ததால்தான். தமிழின் முன்னணி நடிகர்கள் பலரின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் இந்த ஆண்டில் வெளிவர இருக்கின்றன. அவை என்னென்ன என்பது தெரியுமா? 

 

தங்கலான்:

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள தங்கலான் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை தூண்டி வருகிறது. அதை மேலும் தூண்டி விடும் வகையில், படக்குழு சமீபத்தடில் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டது. அதில், நடிகர் விக்ரம் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் வந்து அனைவரையும் வியக்க வைத்தார். பா.ரஞ்சித் திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே முத்திரை பதிக்கும் இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார். இதனால், தங்கலான் படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும் படங்களுள் ஒன்றாக மாறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

லியோ:

“லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ள LCU-வில் லியோ இருக்கா இல்லையா..இது எனக்கு தெரிஞ்சாகனும்..” என பல கோடி ரசிகர்கள் எங்கு சென்றாலும் லியோ படக்குழுவை நச்சரித்து வருகின்றனர். அந்த அளவிற்கு லியோ படம் ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அது மட்டுமன்றி, நெடு நாட்களாக படங்களில் ஜோடி சேராமல் இருந்த த்ரிஷாவும் விஜய்யும் இந்த படத்தில் ஒன்றாக நடிக்கின்றனர். படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்ப்படுகிறது. படத்தின் டைட்டில் தீம் “ப்ளடி ஸ்வீட்” வெளியானதிலிருந்து அதை முனங்காத விஜய் ரசிகர்கள் யாரும் இல்லை என்றே கூற வேண்டும். 

 

மேலும் படிக்க | அஜித் ’V’ என்ற எழுத்தில் படங்களின் பெயர்களை வைக்க என்ன காரணம்? மறைந்திருக்கும் ரகசியம் என்ன?

 

மாவீரன்-அயலான்:

தொடர்ந்து பல படங்களில் ஃப்ளாப் கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் டான்-டாக்டர் படங்களுக்கு பிறகு ஓரளவு சரிவில் இருந்த தனது மார்கெட்டை தக்கவைத்துக் கொண்டார். பல நாட்களாக தொழில்நுட்ப பணிகளின் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த அயலான் திரைப்படமும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாவீரன் திரைப்படமும் இப்போது சிவகார்த்திகேயனின் ரிலீஸ் லிஸ்டில் உள்ளது. அயலான் திரைப்படம் இந்த தீபாவளிக்கும் அயலான் திரைப்படம் இந்த ஆகஸ்டு மாதமும் வெளிவர இருக்கின்றன. 

 

சிம்புவின் 48ஆவது திரைப்படம்:

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி சிம்புவின் 48ஆவது படத்தையும் இயக்குகிறார். நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிருவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இதையெல்லாம் தாண்டி, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு தனது ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் வகையில் பயங்கரமான ஸ்பீச் ஒன்றை கொடுத்தார். இதையெல்லாம் தாண்டி, சிம்பு-தேசிங் பெரியசாமி-கமல் என வெற்றிக்கூட்டணிே ஒரே படத்தில் இணைய உள்ளதால் STR 48 படத்தின் மீது பலருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

கங்குவா:

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம், கங்குவா. சூர்யா முதல் முறையாக ஃபேண்டசி கதையுள்ள திரைப்படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமன்றி, சிறுத்தை சிவா இப்படத்தை டைரக்டு செய்வதால் இப்படத்தின் மீது ரசிகர்களிக்கு கலவையான எதிர்பார்ப்புகள்தான் இருக்கிறது. இப்படம், இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக வேறு பேச்சு அடிபடுகிறது. இது, கங்குவா படம் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

 

ஜெயிலர்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று வருகின்றன. ரஜினியுடன் இணைந்து வெவ்வேறு மொழி திரைப்படங்களின் முன்னணி நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

 

கைதி2-ஜப்பான்:

கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டில் வெளிவர இருக்கிறது. LCU-வில் ஒரு அங்கமாக இருக்கும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையலிலேயே இருக்கின்றது. ஆனாலும், ரசிகர்கள் அந்த படத்தைதான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

 

இந்தியன்-2:

1996ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம் இந்தியன். கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இந்த படத்தையும், இயக்குநர் ஷங்கரே இயக்குவதால் ரசிகர்கள் இப்படத்திற்காக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். கமலும் இந்த படத்திற்காக ப்ரத்யேக பயிற்சிகளை மேற்காெண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கேப்டன் மில்லர்:

தமிழில் அறிமுகமாகி இன்று ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல திரையுலகில் கலக்கி வருபவர் தனுஷ். இவரது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இப்படத்தில், பிரியங்கா மோகன் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். அவ்வப்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தடங்கள்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

விடாமுயற்சி:

அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை லைகா நிறுவனம் வெளியிட்டது. தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் சில படங்களை கொடுத்த மகிழ் திருமேனி இப்படத்தினை இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அஜித் நடிக்கும் சமீபத்திய படங்களுக்கு வி வரிசையில்தான் பெயர் சூட்டப்படுகின்றன. விவேகம், விஸ்வாசம், வலிமை லிஸ்டில் இப்போது விடாமுயற்சியும் இணைந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. 

 

மேலும் படிக்க | வேற லெவல்..வெளியானது மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக்..மிரட்டும் வடிவேலு, உதயநிதி

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News