கிச்சனில் ரொமான்ஸ் செய்யும் எழில்-இந்து ஜோடி! கடுப்பான மனோகரியின் கொலைத் திட்டம்!

Ninaithen Vandhai TV serial Update: இந்துவை மனோகரி போட்டு தள்ளியது எப்படி? உடையும் ரகசியம் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 15, 2024, 12:40 PM IST
  • இந்துவை மனோகரி போட்டு தள்ளியது எப்படி?
  • உடையும் ரகசியம்
  • நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
கிச்சனில் ரொமான்ஸ் செய்யும் எழில்-இந்து ஜோடி! கடுப்பான மனோகரியின் கொலைத் திட்டம்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வேலு எழிலுக்காக நீ யாரை வேணாலும் கொல்லுவனு எனக்கு தெரியும் என்று வேலு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, பிளாஷ்கட் ஓப்பனாக எழில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த மனோகரி மீண்டும் எழில் வீட்டிற்கு வருகிறாள். மனோகரியை பார்த்ததும் எழில் சந்தோஷப்படுகிறான். இவ்வளவு நாளா எங்க போய்ட்ட என்று கேட்டு விசாரிக்கிறான். 

பிறகு இந்து அவளுக்காக காபி போட போக பின்னாடியே சென்ற எழில் இந்துவுடன் கிச்சனில் வைத்து ரொமான்ஸ் செய்ய அதை பார்த்த மனோகரி கடுப்பாகிறாள். பிறகு எழில் மனோகரிடம் நான் ரொம்ப லக்கி எனக்கு பிடிச்ச மனைவியும் என் கூட இருக்கா, எப்பவும் என்னை புரிஞ்சிட்டு நடக்குற என் ப்ரண்ட் நீயும் என்கூட இருக்க, எப்பவும் என் கூடவே இரு என்று பேசி கொண்டிருக்க இந்து எழிலை கூப்பிட அவன் உள்ளே சென்று விடுகிறான். 

மேலும் படிக்க | திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு

அதன் பிறகு மைண்ட் வாய்ஸில் இனிமே உன்னை விட்டு போகவே மாட்டேன் என்று சொல்லும் மனோகரி அடியாளுக்கு போனை போட்டு இந்துவை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறாள். மறுநாள் இந்துவுக்கு போன் கால் வருகிறது. அதில் ஆஸ்ரமத்தில் இருந்து பேசுவதாகவும் உங்க அப்பா அம்மா யாரு தெரிந்து விட்டது, நீங்க ஆசிரமத்துக்கு வாங்க என்று போனை வைக்கின்றனர். 

அம்மா அப்பா பற்றி தெரிந்து விட்டதாக கிடைத்த தகவலால் இந்து சந்தோசமாக கிளம்ப, வீட்டில் யாரும் இல்லாமல் மனோகரி மட்டும் இருக்க அவளிடம் சொல்லி விட்டு கிளம்பியதும் இந்து செல்லும் காரை லாரி ஒன்று துரத்தி கொண்டே வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | KS ரவிக்குமார் மற்றும் விக்ரமன் என்வாழ்வில் முக்கியமான நபர்கள் - சரத்குமார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News