IPL வேண்டாம், சினிமா மட்டும் வேண்டுமா? கோபத்தில் ரசிகர்கள்!

IPL வேண்டாம் என கூறி தற்போது திரைப்படங்களை மட்டும் வெளிவிடுதல் நியாமா என ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்!

Last Updated : Apr 20, 2018, 08:52 AM IST
IPL வேண்டாம், சினிமா மட்டும் வேண்டுமா? கோபத்தில் ரசிகர்கள்! title=

IPL வேண்டாம் என கூறி தற்போது திரைப்படங்களை மட்டும் வெளிவிடுதல் நியாமா என ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்!

கடந்த மார்ச் 1 முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 48 நாட்களாக புதிய படங்கள் எதுவும் திரைக்கு வெளியாகவில்லை, மேலும் அனைத்து படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. 

ஒன்றரை மாத வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு இன்று முதல் தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது. அதன்படி முதலாவதாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான மெர்க்குரி படம் வெளியாகிறது. 

முன்னதாக IPL போட்டிகளை சென்னையில் நடத்த திரையுலகினர் உள்பட அனைவரும் போராட்டம் நடத்தினர். இதனால சென்னை போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டது. இந்த செயல்பாட்டால் கோபமுற்ற கிரிக்கெட் ரசிகர்கள் "IPL சிதைக்கும் போராட்டத்தினை சினிமாக சிதைக்காதா?" ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.

Trending News