பிரபல இசை, நடனக் கலைஞர் அவிச்சி மரணமடைந்தார்!

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 28-வயது பிரபல இசை, நடனக் கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்-ல் மரணம் அடைந்துள்ளார்! 

Last Updated : Apr 21, 2018, 10:34 AM IST
பிரபல இசை, நடனக் கலைஞர் அவிச்சி மரணமடைந்தார்! title=

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 28-வயது பிரபல இசை, நடனக் கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்-ல் மரணம் அடைந்துள்ளார்! 

இதுவரை அவரது மரணத்திற்கான காரணம் குறித்துத் தகவல் வெளியாகவில்லை. இந்த செய்தியை கேட்டு உலகளவில் உள்ள அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

உலகின் சிறந்த DJ கலைஞர்களில் ஒருவராக கருதப்படும் அவிச்சியின் படைப்புகளில் குறிபிட்டத்தக்கவை.... Wake Me Up, Levels, Lonely Together போன்றவை ஆகும்.

முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு அவிச்சி, தான் உலகச் சுற்றுலா மேற்கொள்வதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அவரது உடலநலக் கோளாறு அதற்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் அவிச்சி, இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அவரது படைப்புகளில் சில....

Wake Me Up

Hey Brother 

Levels 

Seek Bromance

Waiting for Love

Trending News