CWC 5-ல் இருந்து தாமு விலகாததற்கான காரணம் என்ன? வெங்கடேஷ் பட் சொன்ன சீக்ரெட்!

Cooku With Comali 5 : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன், தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் இதிலிருந்து செஃப் தாமு விலகாதது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : May 16, 2024, 02:49 PM IST
  • குக் வித் கோமாளி சீசன் 5ல் தாமு
  • விலகுவதாக கூறிவிட்டு ஏன் விலகவில்லை
  • காரணம் இதுதான்!
CWC 5-ல் இருந்து தாமு விலகாததற்கான காரணம் என்ன? வெங்கடேஷ் பட் சொன்ன சீக்ரெட்! title=

Cooku With Comali 5 : தமிழ் சின்னத்திரை தாெலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வருவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில், செஃப் தாமுவும், புதிய செஃப் மாதம்பட்டி ரங்கராஜும் நடுவர்களாக செயல்படுகின்றனர். முன்னர் இதில் நடுவராக செயல்பட்ட செஃப் வெங்கடேஷ் பட், இந்த சீசனில் விலகினார். இதற்கான காரணம் குறித்தும், செஃப் தாமு விலகாதது குறித்தும் வெங்கடேஷ் பட ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். 

வெங்கடேஷ் பட் விலகல்:

சமைக்க தெரிந்த செலிப்ரிட்டி, சமைக்கவே தெரியாத காமெடி கலைஞர்-இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அலப்பரைதான் குக் வித் கோமாளி. 2019ஆம் ஆண்டில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கியது. இந்த சீசன் சூப்பர் ஹிட் அடிக்க, தொடர்ந்து வந்த 2வது மற்றும் 3,4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த சீசனில் செஃப் வெங்கடேஷ் பட்டும் தாமுவும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை என வெங்கடேஷ் பட் அறிவித்தார். 

இவைத்தொடர்ந்து செஃப் தாமுவும் தான் குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். ஆனால், அதற்கு மறுநாளே அந்த வீடியோவை தனது பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

காரணம் என்ன? 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி, தளபதி நடிகரின் பெயரை கொண்ட ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியை மீடியா மேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வந்தது. 4 சீசன்களை நடத்திய இவர்கள், 5வது சீசனில் விலகிக்கொள்வதாக அறிவித்தனர். இதனால், சம்பந்தப்பட்ட சேனலுக்கும் இவர்களுக்கும் மனஸ்தாபம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதில், வெங்கடேஷ் பட்டும் தலை நுழைத்ததால் அவரும் இதிலிருந்து விலக காரணம் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | குக் வித் கோமாளி 5ல் அதிக சம்பளம் வாங்கும் குக் ‘இவர்’தான்! ஒரு நாளைக்கு இவ்வளவா?

செஃப் தாமு விலகாமல் இருக்க காரணம்..

செஃப் தாமு விலகுவதாக கூறிவிட்டு, இப்போது அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இதற்கு காரணம், சம்பந்தப்பட்ட சேனல் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன் பிறகு அவர்களுக்குள் உடன்படிக்கை ஏற்பட்டு இணக்கமானதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை, செஃப் வெங்கடேஷ் பட் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். முன்னர், செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்த போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி வைப் ஆகவே இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

புது நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட்!

இன்னொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டாப் குக் டூப்பு குக்’ என்ற காமெடி சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி போலவே இருந்தாலும், இதில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நடிகைகள் சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சைத்ரா ரெட்டி உள்ளிட்ட பலர் குக்குகளாக பங்கேற்க, இவர்களுடன் டூப் குக்காக ஜி.பி.முத்து, மோனிஷா ப்ளெஸ்ஸி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். அடுத்த வாரம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. 

மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராய்க்கு விபத்து..! கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News