அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு சூப்பர் செய்தி: அபுதாபியில் அடுத்த ஆண்டு துவங்குகிறது ஐஐடி

IIT in Abu Dhabi:  வளாகத்தை எங்கு அமைப்பது, பாடத்திட்டம், மாணவர் அமைப்பு மற்றும் வணிக மாதிரி போன்ற முக்கிய விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2023, 04:18 PM IST
  • அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
  • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) தனது முதல் வெளிநாட்டு வளாகத்தை அடுத்த ஆண்டு அபுதாபியில் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் உறுதிப்படுத்தினார்.
அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு சூப்பர் செய்தி: அபுதாபியில் அடுத்த ஆண்டு துவங்குகிறது ஐஐடி title=

அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) தனது முதல் வெளிநாட்டு வளாகத்தை அடுத்த ஆண்டு அபுதாபியில் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் உறுதிப்படுத்தினார். இது குறித்து தெரிவித்த சுதிர், ஐஐடி-கள் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உயர்நிலை கல்வி நிறுவனங்கள் என்றும், அந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனம் அபு தாபியில் வருவது ஒரு பெரிய, குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். 

அடுத்த ஆண்டு அமர்வுகள் தொடங்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்த பிற விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

தற்போது ADEK மற்றும் IIT டெல்லி இடையே அபு தாபியில் ஐஐடி-ஐ கொண்டு வருவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. வளாகத்தை எங்கு அமைப்பது, பாடத்திட்டம், மாணவர் அமைப்பு மற்றும் வணிக மாதிரி போன்ற முக்கிய விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | Cyber Crime: மோசடி ஆசாமிகளிடம் 10 லட்சம் ரூபாயை இழந்த NRI!

அபு தாபியில் வரவுள்ள புதிய ஐஐடி, வருங்கால மாணவர்களுக்கு உயர்நிலைக் கல்வியை வழங்கும் என்று சுதிர் கூறினார். ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் விவாதத்தில் உள்ளதாக கூறிய அவர், இந்த கல்வி நிறுவனத்தின் கல்வி மிகவும் தரமானதாக இருக்கும் என்றும், ஐஐடி தனித்துவம் பெற்றுள்ள உயர்தர கல்வி இந்த கேம்பசிலும் முழுமையாக கிடைக்கும் என்றும், அதற்கான உத்தரவாதம் இருக்கும் என்றும் கூறினார். 

நவம்பரில், ஐஐடி டெல்லியின் உயர்மட்டக் குழு ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகருக்கு விஜயம் செய்து, கல்வி மற்றும் அறிவுத்துறை அபுதாபி (ADEK) அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிற பங்குதாரர்களுடன் விரிவான விவாதங்களை நடத்தியது.

தற்போது, இந்தியாவில் 23 ஐஐடிகள் உள்ளன. அவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகின்றன. ஐஐடி நிறுவனம் உலகின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற பலர் ஐஐடி-க்களின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில்  ஆல்பாபெட் இன்க். சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் இந்திய தொழிலதிபர் என்ஆர் நாராயண மூர்த்தி ஆகியோரும் அடங்குவர். 

மேலும் படிக்க | Golden Visa: முதலீட்டை ஈர்த்த கோல்டன் விசாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐரோப்பிய நாடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News