நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு விவரம்!

இயக்குனராக இருந்து தற்போது நடிகராக உயர்ந்துள்ள நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகராக வளம் வருகிறார்.

 

1 /5

தமிழ் சினிமா தொடங்கி தெலுங்கு சினிமா வரை குணசித்திர கதாபாத்திரங்கள், ஹீரோ, வில்லன் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பவர் சமுத்திரக்கனி.  

2 /5

தற்போது தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பல முக்கிய ஹீரோ படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.  

3 /5

நடிப்பை தாண்டி பல படங்களை இயக்கியும் உள்ளார் சமுத்திரக்கனி. நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளியானவை.   

4 /5

இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமுத்திரக்கனியின் சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. சமுத்திரக்கனி ஒரு படத்தில் நடிக்க ரூ. 30 முதல் ரூ. 40 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.  

5 /5

கார்கள் மீது அதிக பிரியம் கொண்ட சமுத்திரக்கனி ஸ்கார்பியோ, Audi A4, BMW போன்ற சொகுசு கார்களை கார்களை வைத்துள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.40 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.