அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ மிரட்டல் லுக் வெளியீடு

Good Bad Ugly First look : நடிகர் அஜித் நடிக்கும் Good Bad Ugly படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Good Bad Ugly First look : தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். அவரது நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ எனும் படம் உருவாகிறது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான, நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

1 /5

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'Good Bad Ugly' (குட் பேட் அக்லி). இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் ஹீரோவாக நடிப்பதை தொடர்ந்து இப்படம் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.   

2 /5

அஜித்தின் 63-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

3 /5

தற்போது குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது.  

4 /5

குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். இது படத்தின் தலைப்புக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.   

5 /5

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஃபேன் பாயாக மட்டுமல்லாமல், ஃபேன் பாய் இயக்குநராகவும் தருகிறேன். யுனிவர்ஸுக்கும், கடவுளுக்கும் நன்றி என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். I’m working with the most versatile performer ever, who can deliver Good Bad Ugly at the same timeMagic of life is, sticking my Star’s poster in my cupboard and placing banners in theatres. And now presenting this first look poster not only as a fan boy, but also as a fan… pic.twitter.com/hIXde5CrcR — Adhik Ravichandran (@Adhikravi) May 19, 2024