சென்னை அணி செய்த தவறுகள் இது தான்! பயிற்சியாளர் சொன்ன குற்றசாட்டுகள்!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. தற்போது 5வது இடத்தில் உள்ளது.

 

1 /5

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் புள்ளிபட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  

2 /5

இதுவரை விளையாடிய எட்டு ஆட்டங்களில் நான்கில் வெற்றியும், நான்கில் தோல்வியும் சந்தித்து உள்ளது சென்னை அணி. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் பிளெமிங் பேசியுள்ளார்.  

3 /5

அணியின் சில இடங்களில் நாங்கள் சற்று மோசமாக இருக்கிறோம், எனவே விரைவில் அதற்கான தீர்வை கண்டறிய முயற்சிக்கிறோம். மிட்செலை ஹிட்டிங் ரோலில் இருந்து மாற்ற முயற்சி செய்து வருகிறோம் என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.  

4 /5

ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் நன்றாக விளையாட முயற்சி செய்கிறோம். தோல்விகளில் இருந்து மீள முயற்சி செய்கிறோம். அழுத்தத்தின் கீழ் சில சிறிய விஷயங்களை நாங்கள் தவறு செய்தோம் என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.  

5 /5

சென்னை அணி அடுத்து இரண்டு ஆட்டங்கள் சென்னையில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தற்போது சிஎஸ்கே உள்ளது.