Bharat Mart At Dubai: சீனாவின் டிராகன் மார்ட் இனி ஒண்ணும் இல்ல! பாரத் மார்ட் அடி வைத்த இந்தியா!

Dubai Bharat Mart: உலகளாவிய விநியோகச் சங்கிலி மையமாக மாறும் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 'பாரத் மார்ட்' என்ற பெயரில் கிடங்கு வசதியை நிறுவுகிறது. இது இந்தியாவின் ஏற்றுமதிக்கு ஊக்கம் கொடுக்கும்

இந்திய ஏற்றுமதியாளர்கள், தங்களுடைய தயாரிப்புகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த 'பாரத் மார்ட்' தளமாக மாறும். பாரத் மார்ட்,  2025க்குள் செயலுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது...

1 /8

இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துபாயில் ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த 'பாரத் மார்ட்' உருவாகிறது. இந்திய வர்த்தகர்களுக்கு வசதிகளை செய்துக் கொடுக்கும் பாரத் மார்ட் வேர் ஹவுசிங் வசதிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

2 /8

உலகளாவிய விநியோகச் சங்கிலி அமைப்பாக மாறும் வகையில் இந்தியா இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. துபாயில் சீனா இப்படி ஒரு இடத்தை நிறுவியுள்ளது.  

3 /8

2025ம் ஆண்டுக்குள் பாரத் மார்ட் கட்டுமானம் முடிந்து, அதன் பிறகு இந்திய வர்த்தகர்களின் பொருட்கள் ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தப்படும்

4 /8

துபாயில் அமையவிருக்கும் பாரத் மார்ட், இந்திய வரத்தகர்கள் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, யூரேசியாவில் உள்ள சர்வதேச நுகர்வோரை சென்றடைவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கும்  

5 /8

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோர் பாரத் மார்ட் வளாகத்திற்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்கள்

6 /8

'டிராகன் மார்ட்' எனப்படும் சீனாவின் கிடங்கு வசதிக்கு போட்டியாக 'பாரத் மார்ட்' தயாராக உள்ளது.

7 /8

100,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த வசதி, டிபி வேர்ல்ட் மூலம் நிர்வகிக்கப்படும் துபாயின் ஜெபல் அலி ஃப்ரீ ஜோன் என்ற பகுதியில் பாரத் மார்ட் கட்டப்படுகிறது  

8 /8

சில்லறை ஷோரூம்கள், கிடங்குகள், அலுவலகங்கள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டிருக்கும். கனரக இயந்திரங்கள் முதல் விரைவில் அழுகிப்போகும் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்கள் துபாய் 'பாரத் மார்ட்'  வளாகத்தில் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்