வரப்போகிறது குரு பெயர்ச்சி: குருதசை, பணம், அதிர்ஷ்டத்தை பெறப்போக்கும் ராசிகள் இவைதான்

Guru Peyarchi Guru Dasa Palangal2024 : செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு பகவானின் குரு தசையால் எந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தருவார் என்று பார்க்கலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் அவரது தசா புத்தி காலத்தில் ஜாதகருக்கு நல்ல யோகங்களை வாரி வழங்குவார். அந்த வகையில் மேஷ ராசியில் பயணத்து வரும் குரு, மே மாதம் 1 ஆம் தேதி அன்று மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசிக்கு (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். 

1 /6

மேஷ ராசி: குருபகவான் மே 1 ஆம் தேதி தனது ஜென்ம ராசியில் இருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு குடியேறப் போவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு இதனால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பம் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கும். மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வுடன், சம்பள உயர்வை பெறுவீர்கள். புதிய தொழிளை தொடங்க மே மாதம் வரை காத்திருங்கள்.  

2 /6

ரிஷப ராசி: குரு பகவானால் வரும் மே மாதம் ரிஷப ராசியில் பெயர்ச்சி நடக்ககியுள்ளது. இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிதாக வீடு அல்லது நான்கு சக்கர வாகனத்தை வாங்கலாம். திருமண வாழ்க்கையில் சிறப்பாக இருக்கும். குரு யோகம் உண்டாகும். பிள்ளைகள் உங்களுகை பெருமைப்படுத்துவார்கள். கூட்டு தொழிலில் லாம்ப உண்டாகும். வெளிநாடு பயணத்தை மேற்கொள்ளலாம்.

3 /6

மிதுன ராசி: குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும். கடன் தொல்லை நீங்கும். சுப செலவுகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு அல்லது வாகனத்தை வாங்கலாம். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். முதலீடு மூலம் பண வரவு உண்டாகும்.

4 /6

கடக ராசி: நிகழவிருக்கும் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொட்ட காரியங்கள் அனைத்தும் சாதகமாக நிறைவடையும். பணவரவு உண்டாகும். திருமணம் கைகூடும். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 

5 /6

குரு பகவானின் அருள் பெற இந்த ஸ்லோகத்தை தினமும் ஜெபிக்கவும். "குரு பிரம்மா, குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர; குரு சாக்‌ஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ; குரவே சர்வ லோகானாம் பிஷஜே பவ யோகினாம் நிதயே சர்வ வித்யானாம் ஸ்ரீ தக்‌ஷிணாமூர்த்தயே நமஹ"

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.