அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் கதாநாயகி ‘இவர்’தான்! அட நம்ம ஊர் அழகி..

Director Atlee Movie Starring Allu Arjun : இயக்குநர் அட்லீ இயக்கி வரும் புதிய படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் யார் தெரியுமா? 

Director Atlee Movie Starring Allu Arjun : கடந்த ஆண்டு வெளியான ‘ஜவான்’ படம் மூலம் உலகளவில் பிரபலமான இயக்குநராக மாறியிருப்பவர், அட்லீ. தமிழ் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த இவர், ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக மாறினார். தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தார். அடுத்து, 2 வருடமாக ‘பாலிவுட் பாட்ஷா’ என ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அதுதான், ஜவான். இப்படம் உலகளவில் ரூ.1000 கோடி வசூலை தாண்டியது. இதையடுத்து, இவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அது என்ன படம் தெரியுமா?

1 /7

இந்திய திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், அட்லீ. சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் இவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. இதையடுத்து, பல தென்னிந்திய தயாரிப்பாளர்களால் தேடப்படுபவராக இருக்கிறார், அட்லீ. 

2 /7

அட்லீ, அடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறாராம். புஷ்பா 2 படத்தில் கொஞ்சம் பிசியாக இருக்கும் அல்லு அர்ஜுன் அடுத்து, அட்லீ இயக்கும் படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

3 /7

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு துவங்க உள்ளதாகவும், அட்லீ தற்போது கதை டிஸ்கஷன் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது மட்டுமன்றி, இந்த படத்தில் வரும் லாபத்தில் தனக்கு பாதி வேண்டும் என்றும் கேட்டிருக்கிறாராம். 

4 /7

அட்லீயுடன் சில படங்களில் ஏற்கனவே இணைந்து பணியாற்றியுள்ள அனிருத், அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் படத்திலும் இசையமைக்க இருக்கிறாராம். 

5 /7

அட்லீ-அல்லு அர்ஜுனின் படத்தில் எந்த நாயகியை நடிக்க வைக்கலாம் என தற்போது ஆலோசனை நடைப்பெற்று வருகிறதாம். இதற்காக தென்னிந்திய திரையுலகின் பெரிய நடிகைகளான சமந்தா மற்றும் த்ரிஷாவை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. 

6 /7

த்ரிஷா, ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள படங்கள் சிலவற்றில் கமிட்டாகியுள்ளதால் அவர் அல்லு அர்ஜுனுடன் நடிக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதனால் சமந்தா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. 

7 /7

சமந்தா, திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சில மாத காலங்களுக்கு பிரேக் எடுத்திருந்தார். தனது ஓய்வில் இருந்தும், உடல் நலக்குறைபாடுகளில் இருந்தும் மீள முயற்சி செய்து கொண்டிருக்கும் சமந்தா, இந்த படத்தில் கமிட்டாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமன்றி, இவர் ஏற்கனவே அல்லு அர்ஜுனுடன் இணைந்து ‘ஊ அண்டாவா’ பாடலுக்கு புஷ்பா படத்தில் நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.