அக்டோபர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது குபேரரின் அருள் மழை, ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Monthly Horoscope, October 2023: அக்டோபர் மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் கிரகங்களின் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். 

Monthly Horoscope, October 2023 (அக்டோபர் மாத ராசிபலன்): அக்டோபர் மாதத்தில் வரும் மஹாளய பக்ஷம் மற்றும் நவராத்திரியின் காரணமாக, முன்னோர்கள் மற்றும் அன்னை துர்க்கையின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான சிறப்பு வாய்ப்பையும் மக்கள் பெறுவார்கள். இதன் காரணமாக, அக்டோபர் 2023 அனைத்து ராசிக்காரர்களுக்கும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. இந்த மாதம் ஏற்படவுள்ள கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் இருக்கும். சிலருக்கு இதனால் சுப பலன்களும் சிலருக்கு சிறு பிரச்சனைகளும் வரக்கூடும். அக்டோபர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அபரிமிதமான செல்வத்தையும் கொடுக்கப் போகிறது. அக்டோபர் 2023 மாத ஜாதகத்தின்படி, இவர்கள் செல்வத்தின் கடவுளான குபேரின் அருளால் அதிக பணம் மற்றும் செழிப்பைப் பெறப் போகிறார்கள். அதுமட்டுமின்றி, இவர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பதோடு, ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அக்டோபரில் அனைத்து 12 ராசிகளுக்குமான ராசிபலனை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் நிதிப் பலன்களைத் தரும். நிலுவையில் உள்ள பணத்தைப் பெறுவீர்கள். மேலும், நீங்கள் இந்த மாதம் புத்திசாலித்தனமாக செலவிடுவீர்கள். இதன் காரணமாக சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வேலை நன்றாக நடக்கும்.

2 /13

ரிஷபம்: அதிகச் செலவுகளால் மனது கஷ்டப்படும். தெரியாத பயம் உங்களை ஆட்டிப்படைக்கும். தலைவலி மற்றும் கண் வலி வரக்கூடும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். 

3 /13

மிதுனம்: மன நிலை நன்றாக இருக்கும். திடீர் நிதி ஆதாயம் கூடும். குழந்தைகள் மீது அன்பு அதிகரிக்கும். பணியிடத்திலும் வியாபாரத்திலும் வெற்றிகள் கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. 

4 /13

கடகம்: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தொழில் நிலை சுமாராக இருக்கும். இந்த மாதம் புதிதாக தொழில் தொடங்க வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிகப்படியான கவனம் தேவை. 

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வேலையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் மாற்றம் ஏற்படலாம், அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். வணிக வர்க்கம் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வரலாம்.

6 /13

கன்னி: காயங்கள் ஏற்படலாம். நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்கலாம். சூழ்நிலைகள் பாதகமானவையாக மாறும். அனைத்து விஷயங்களையும் மிகவும் அமைதியாக யோசித்து செய்யுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

7 /13

துலாம்: உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் கணவன் / மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மன அமைதியின்மையைக் கட்டுப்படுத்துங்கள். செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் குறைபாடுகள் எற்படக்கூடும், ஆனால் சரியான பராமரிப்பு மூலம் சரி செய்யலாம். 

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதம் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்கள் நிதி நிலை மேம்படும். இந்த மாதம் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டத்தால் உங்கள் முன்னேற்றமும் அதிகமாகும்.

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு, அக்டோபர் மாதம் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகளைக் கொடுக்கலாம். விரும்பிய இடத்திற்கு மாற்றம் ஏற்படும். பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். மேலும் தொழில் ரீதியாக இந்த மாதம் மிகவும் சாதகமாக இருக்கும் என்று கூறலாம்.  

10 /13

மகரம்: இல்லற மகிழ்ச்சி குலையும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் சுழற்சி இருக்கும். வீட்டில் உள்ள பிரச்சனைகள் வெளியில் வரலாம். நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்படக்கூடும். வியாபாரமும் நன்றாக இருக்கும். 

11 /13

கும்பம்: மூக்கு, காது, தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் சுமாரான நிலை இருக்கும். குழந்தைகளின் அன்பும் நன்றாக இருக்கும். 

12 /13

மீனம்: இந்த மாதம் மீன ராசிக்காரர்களுக்கு மிக நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் முன்னேறும். இத்தனை நாட்களாக வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.