குரு பெயர்ச்சி 2023: ஆண்டு முழுதும் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான வாழ்க்கை.... அசச்சிக்க முடியாது!!

Guru Peyarchi, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், குரு பகவான் கடவுள்களின் குருவாகக் கருதப்படுகிறார். தேவகுருவின் அருள் இருந்தால், மனிதர்களின் தலைவிதி ஒளிமயமாக இருக்கும்.

வேத ஜோதிடத்தில், குரு பகவான், கல்வி, சமயப்பணி, புனித ஸ்தலங்கள், தொண்டு, அறம், செல்வம், குழந்தைகள், மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். 27 நட்சத்திரங்களில். குரு பார்வை பட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கி அனைத்து இன்பங்களும் கைகூடும் என்பது உறுதி. 

1 /6

குரு பெயர்ச்சி: இந்த ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். அவர் ஆண்டு முழுவதும் இந்த ராசியில் இருப்பார். சில ராசிக்காரர்களுக்கு மேஷ ராசியில் குரு பகவானின் பெயர்ச்சி அதிகப்படியான பலன்களை அள்ளித் தரும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.   

2 /6

மேஷம்: இந்த ராசியில்தான் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். இந்த காலத்தில் உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர சகோதரிகள் உங்களுக்கு துணை நிற்பார்கள். நீங்கள் பண பலன்களைப் பெறுவீர்கள். இதன் காரணமாக பொருளாதார நிலை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்வில் சுகத்தை அனுபவிப்பீர்கள். சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட நேரிடும்.

3 /6

மிதுனம்: தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல பலன் தரும் காலம் இது. பரிவர்த்தனைகளுக்கு இது ஒரு நல்ல நேரம். நீங்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றை பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதிய வேலையையும் தொடங்க இது மிகவும் சாதகமான நேரம். 

4 /6

சிம்மம்: குருவின் சஞ்சாரத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கியுள்ளன. முதலீட்டில் லாபம் அடைவீர்கள். மரியாதை கூடும். தன்னம்பிக்கை அதிகரித்து திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

5 /6

தனுசு: மேஷ ராசியில் குரு இருப்பதால் உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். ஆனால் செலவைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த காலத்தில் தொழில், வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும், எதிரிகளால் உங்கள் முன் நிற்க முடியாது. ஆரோக்கியம் சீராக இருக்கும் மற்றும் திருமண வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.