குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அரச கோடீஸ்வர வாழ்க்கை

அடுத்த மாதம் மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி ஜோதிட உலகில் மிக முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயர்ச்சியால் மேஷம், கன்னி, விருச்சிகம், தனுசு போன்ற ராசிகளுக்கு பல்வேறு நன்மை தரும் மாற்றங்கள் ஏற்படுத்தும்.

ஜோதிடத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகளில் ஒன்றாக குரு பெயர்ச்சி கருதப்படுகிறது. அதன்படி வரும் மே 1ம் தேதி குரு பெயர்ச்சி நடக்க உள்ளது. இவர் 2024 மே மாதம் 1ம் தேதி நண்பகல் 12.59 மணிக்கு மேஷ ராசியில் உள்ள கிருத்திகை 1ம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை 2ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆக உள்ளார். எனவே குரு பெயர்ச்சியினால், எந்த ராசிகளுக்கு செல்வம், மகிழ்ச்சி, தொழிலில் லாபம், பண வரவு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /13

மேஷம்: மேஷ ராசியின் பொருளாதார நிலையை குரு பகவான் மாற்றப்போகிறார். சுப செலவுகள் அதிகரிக்கும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்பம், திருமணம் என எல்லாம் கிடைக்கும். குபேர யோகம் அடிக்கப்போகிறது. 

2 /13

ரிஷபம்: ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சியால் லாபகரமான பலன்களை அடைவார்கள். புதிய வாகனம், வீடு, மனை, சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்கும்.

3 /13

மிதுனம்: குரு பெயற்சியால் மிதுனத்திற்கு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். சுப செலவுகள் அதிகரிக்கும். வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம்.

4 /13

கடகம்: குரு பெயர்ச்சியால் உங்களது ஆரோக்கியம் மேம்படும். வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனையால் தொல்லைகள் இருந்தால் இப்போத அதிலிருந்து விடுப்படுவீர்கள். பொருளாதாரம் இனி சரியாகும். பணம் உங்களை தேடி வரும். தொழிலில் இரண்டு மடங்கு லாபம் உண்டாகும்.

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்கு பதவி போகலாம். கவனமாக இருக்கவும். வேலையில் கவனத்துடன் இருக்கவும். நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை ஒரு முறைக்கு பல முறை சரி பார்க்கவும். ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளது. எனவே ஜாக்கிரதையுடன் இருக்கவும்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்கு குருவின் 5ம் பார்வையான பூர்வ, புண்ணிய பலன்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம், சொத்து வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற சாதக பலன்கள் கிடைக்கும். சில முக்கிய செயல்களில் நிதானம் தேவை. பண வரவு அதிகரிக்கும். 

7 /13

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போக்குவரத்தில் கவனமாக இருக்கவும். விபத்து ஏற்படலாம். பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. நிலம் வாங்குவது, வீடு வாங்குவதில் கவனம் செலுத்தவும். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.

8 /13

விருச்சிகம்: குருவின் அருள் காரணமாக விருச்சிக ராசிக்கு திருமணம் பாக்கியம் உண்டாகும். விருச்சிக ராசி பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கலாம். அவசர புத்தியை விடுத்து நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் அருளால் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம். வேலையில் உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும்.

10 /13

மகரம்: மகர ராசிக்கு குருவின் மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கிய உண்டாகும். ஆன்மிக சுற்றுலா செல்லலாம். தந்தை வகையில் நல்ல லாபம், சொத்துக்கள் கிடைக்கலாம். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

11 /13

கும்பம்: கும்பம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு அனுகூலம் ஆதாயத்தை தரும். மனைவி வகையில் சிறுசிறு வைத்திய செலவுகள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரத்தில் லாபமும் வளர்ச்சியும் அடையும். பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கலாம்.  

12 /13

மீனம்: இந்த சிறப்பு நேரத்தில், செல்வாக்கு மிக்க நபரைச் சந்திக்கலாம், எதிர்காலத்தில் நிறைய நன்மைகளைத் தரும். பயணங்களால் லாப வடிவில் வெகுமதி கிடைக்கும். பணம் செலவழிக்கும் காலம் இதுவாகும். உத்தியோகத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில்a அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.