கொலஸ்ட்ரால் குறைய இந்த 5 காய்கறிகளை கட்டாயம் சாப்பிடுங்கள்

Vegetables To Control Cholesterol: உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த, சில காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாருங்கள், அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகைகள் உள்ளது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபாத்தான நோய்கள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க சில காய்கறிகளை உண்டால் போதும்.

 

1 /6

கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.

2 /6

உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க கத்தரிக்காயை உட்கொள்ளலாம். இதில் கலோரி குறைவு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.  

3 /6

பீன்ஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.  

4 /6

பூண்டு கொலஸ்ட்ராலைக் குறைக்க மிகவும் நன்மை பயக்கும். இதில் ஹைப்பர்லிபிடெமியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.  

5 /6

உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க வெண்டைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகளவு உள்ளதால், இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.  

6 /6

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.