தளபதி 69 படத்தின் இயக்குனர் இவர் தானா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Thalapathy 69 Director: கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி அரசியலில் கால் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

 

1 /5

விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற தனது புதிய கட்சியை அறிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்  

2 /5

மேலும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.  

3 /5

தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது, இதனை தொடர்ந்து தளபதி 69 படத்தின் நடிக்க உள்ளார்.  

4 /5

DVV Entertainment தயாரிக்கும் இந்த படத்தை யார் இயக்க போகிறார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஹச் வினோத் இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

5 /5

கமல்ஹாசனை வைத்து இயக்கியிருந்த ஒரு பொலிட்டிக்கல் கதையை விஜய்க்கு கூறியிருப்பதாகவும், விஜய் தற்சமயம் ஓகே சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை இந்த ப்ராஜெக்ட் நடைபெற்றால் விஜய்யின் கடைசி படத்தை ஹச் வினோத் இயக்க உள்ளார்.