பிபி அளவு கட்டுக்குள் இருக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை..!!

உயர் இரத்த அழுத்தம் என்பது மோசமான உணவுப்பழக்கம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தத்திற்கு காரணமான ஒரு நோயாகும். உயர் இரத்த அழுத்தம் மிகவும் கடுமையான பிரச்சனை. ஏனெனில், இதன் காரணமாக பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.

BP அளவீடுகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது, அவை சில சமயங்களில் அதிகரித்தும், சில சமயங்களில் குறைந்தும் இருக்கும். உடல் செயல்பாடு, மன அழுத்தம் மற்றும் அதீத உணர்ச்சிகள் போன்ற பல காரணங்கள் BP ஏற்ற இறக்கத்திற்கு காரணமாகின்றன.

1 /8

பிபியை நீண்ட காலமாகக் கட்டுப்படுத்தாமல் இருந்தால், இதய நோய்கள், சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பை ஏற்படும். ஒரு ஆரோக்கியமான நபரின் இரத்த அழுத்தம் 120/80  என்ற அளவில் இருக்க வேண்டும்.

2 /8

உயர் இரத்த அழுத்த நோய் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும், அதனை உணவு மற்றும் பழக்கவழங்கங்கள் மூலம் கட்டுப்படுத்தினால், மருந்தின் அளவை படிப்படியாக குறைக்கலாம்.  

3 /8

நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால், முதலில் உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறை கடைபிடிக்க வேண்டும்  தினமும் குறைந்தது 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த பயிற்சியில் நீங்கள் உங்களுக்கு ஏற்ற பயிற்சிகளை கடைபிடிக்கலாம். நடக்கலாம், படிக்கட்டுகளில் ஏறலாம், எளிய உடற்பயிற்சி செய்யலாம், நீந்தலாம்.

4 /8

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால்,  நொறூக்கு தீனிகளை உணவைத் தவிர்க்கவும். ஜங்க் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு சோடியம் இருப்பதால் அதிக பிபியை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை மட்டுமே ஒரே வழி.

5 /8

உயர் இரத்த அழுத்தம் காரணமாக, பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. உடல் பருமன் இருந்தால், உங்கள் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். நீங்கள் BP அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

6 /8

நீங்கள் இரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்.  உப்பில்  சோடியம் ஏராளமாக உள்ளது மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தில், அதிகப்படியான உப்பு உட்கொள்வது விஷம் போன்றது. 

7 /8

இரத்த அழுத்தம் எப்பொழுதும் இயல்பாக இருக்க வேண்டுமெனில், இரவில் 7-8 மணிநேரம் தூங்க வேண்டும். ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம். உங்களுக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தூக்கமின்மை உங்கள் இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.