குரு பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை.. பணம், புகழ் வந்து சேரும்

Guru Peyarchi: சில ராசிக்காரர்களுக்கு இதனால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் மிகவும் இனிமையான நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 20, 2024, 08:20 PM IST
  • குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவதால் கும்ப ராசிக்காரர்கள் அதிகப் பணம் சம்பாதிப்பார்கள்.
  • உங்கள் பேச்சின் மூலம் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வெற்றி பெறுவீர்கள்.
  • சமய காரியங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.
குரு பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை.. பணம், புகழ் வந்து சேரும் title=

குரு பெயர்ச்சி பலன்கள்: ஜோதிட கணக்கீடுகளின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. சில கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றுகின்றன. சில கிரகங்கள் ராசியை மாற்ற அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன. தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். 

குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு மே 1, 2024 அன்று குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். குருவின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். சிலருக்கு இது பல வித நல்லபலன்களை அளிக்கும். சிலருக்கு இதனால் பிரச்சனைகள் உருவாகும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) இதனால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் மிகவும் இனிமையான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உங்கள் உறவு மிகவும் வலுவாக இருக்கும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்ல காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம் (Leo) 

குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவதால், சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு இது சிறப்பான காலமாக இருக்கும். அலுவலகத்தில் சில பெரிய பொறுப்புகளை பெறுவீர்கள். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் காதல் உறவுகள் வலுவடையும்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான மகாலட்சுமி யோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள், ராஜவாழ்க்கை

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தொழில் சம்பந்தமான பல முக்கிய முடிவுகளை இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் தைரியம், வலிமை, நம்பிக்கை மற்றும் அதிக ஆற்றல் ஆகியவற்றை அனுபவிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க பல வாய்ப்புகள் அமையும். இந்த காலத்தில் நீங்கள் முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளாக் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். 

கும்பம் (Aquarius)

குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவதால் கும்ப ராசிக்காரர்கள் அதிகப் பணம் சம்பாதிப்பார்கள். உங்கள் பேச்சின் மூலம் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வெற்றி பெறுவீர்கள். சமய காரியங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள். நிதிக் கண்ணோட்டத்தில் நாளை ஒரு நல்ல நாளாக இருக்கும். குரு பெயர்ச்சியின் காரணமாக நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது திரும்பக்கிடைக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு அடியிலும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவையும் ஊக்கத்தையும் பெறுவீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் இந்த ஆண்டு நிறைவேறும். வெளிநாட்டில் இருந்து நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Astro: பாடாய படுத்துவார் சுக்கிர பகவான்...பலன்களும் பரிகாரங்களும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News