இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம், கொடூர வெயிலை சமாளிக்க சில சூப்பர் டிப்ஸ்

அக்னி நட்சத்திர காலத்தில் தண்ணீர், நீர் மோர், விசிறி உள்ளிட்ட பொருட்களை தானம் செய்வதன் மூலம் கோடை கால நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 4, 2022, 07:14 AM IST
  • இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
  • கத்திரி வெயில் மே 4 முதல் மே 28 வரை இருக்கும்.
  • கத்திரி வெயிலில் உங்களுக்கு உதவக்கூடிய சில உதவிக்குறிப்புகள் இதோ.
இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம், கொடூர வெயிலை சமாளிக்க சில சூப்பர் டிப்ஸ் title=

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கும் ஒரு விஷயமாகும். அதுவும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலத்தில், வெப்பமும் சூடும் மிக அதிக அளவில் இருப்பது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை 21 ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் பெறும் வேளையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு கத்திரி வெயில் இன்று முதல் அதாவது மே 4 ஆம் தேதி தொடங்குகிறது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும். 

வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில்தான் கோடைக் காலத்தில் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம். 

தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம்தொடங்குவதற்கு முன்பே ஒருசில நகரங்களில் வெயிலின் அளவு உச்சத்தைத் தொட்டு வருகிறது. 

இந்த 24 நாட்களும் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமி மீது விழுவதால் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்களும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களும் தெரிவிக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை வட மாநிலங்களிலேயே இந்த காலகட்டத்தில் வெயில் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | கோடையில் தலைவலியாக உள்ள தலைவலி.. என்ன செய்யலாம்.? 

இந்த நிலையில் சில அடிப்படை வாழ்க்கை முறையின் மூலமே கொளுத்தும் கோடையை சமாளிக்கலாம்.

தண்ணீர் அருந்துவதை அதிகமாக்குங்கள்: உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்க நிறைய தண்ணீர் அருந்துங்கள். உங்கள் உடலை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது ஒருநாளில் பருகுங்கள்.

ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்: வயது ஏற ஏற வெப்பநிலையை சமாளிக்கும் திறன் உடலில் குறைந்துவிடும். இதுவே வயதானவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக் காரணமாக உள்ளது. ஹீட் ஸ்ட்ரோக்கால் காய்ச்சல், மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, தலைவலி, தலைசுற்று ஆகியன ஏற்படலாம்.

எளிமையான உணவை உட்கொள்ளுங்கள்: எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். குறைவாக அடிக்கடி சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவை தவிர்க்கலாம். கொழுப்பு நிறை உணவையும் தவிர்க்கலாம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் அதிக நாட்டம் கொள்ளுங்கள் கோடை சுகமாக இருக்கும். அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி, ஆரஞ்சு, தக்காளி ஆகியனவற்றை சாப்பிடுங்கள்.

இளநீர் குடியுங்கள்: இளநீர் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இது அற்புதமான குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் அதிகமான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உள்ளதால் வெயிலில் உடல் சோர்வை நீக்க இளநீர் பெரிய அளவில் உதவுகிறது. உடலில் நீர் சத்தை அதிகரிக்கவும், உடலை ஊட்டச்சத்துடன் வைத்திருக்கவும் இளநீர் உதவுகிறது.

மேலும் படிக்க | சூப்பர் காய் சுரைக்காய்: சம்மரை கூலாய் கழிக்க சூப்பரா உதவும் சுரைக்காய் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News