அஜித் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வைத்திருந்த பணத்தை ஒரு இளைஞரின் மருத்துவ செலவுக்கு வழங்கிய அஜித் ரசிகர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 1, 2022, 07:35 PM IST
  • இளைஞர் தமிழரசனுடைய இரண்டு கிட்னியும் செயலிழந்தது.
  • அவரது சகோதரி கிருஷ்ணவேணி சமூக வலைதளங்களில் உதவி கேட்டார்.
அஜித் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்! title=

இன்று நடிகர் அஜித்தின் பிறந்த நாள் என்பதால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் இந்த தேதியில், அஜித் ரசிகர் சங்கம் சார்பாக அன்னதானம், இனிப்பு வழங்குதல் போன்றவை நடத்தப்படும். அந்த வரிசையில் இந்த ஆண்டும் அஜித் ரசிகர்கள் மனிதாபமிக்க செயல் ஒன்றை செய்து அசத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை அடுத்த சிவக் கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் தமிழரசன். இவருக்கு 25 வயது ஆகிறது. 

Kidney Failure Patient

இந்நிலையில் இளைஞர் தமிழரசனுடைய இரண்டு கிட்னியும் செயலிழந்தது. இதனால் அவர் தனது இரண்டு கிட்னியையும் இழந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில் அவருடைய மருத்துவ செலவுக்கு தங்களால் இயன்ற நிதியை குடுத்து உதவிடுங்கள் என்று அவரது சகோதரி கிருஷ்ணவேணி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

Sister Krishnaveni

இதனையடுத்து இன்று நடிகர் அஜித்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரம் ரொக்கப் பணத்தை அஜித்தின் ரசிகர்கள் இளைஞர் தமிழரசன் மருத்துவ செலவிற்கு வழங்கினார்கள். 

Ajith Fans Tanjore

அஜித் ரசிகர்களின் இந்த மனிதாபிமான செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஷான்வி ஜோடியானது எப்படி?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News