விஷசாராய விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்..விசாரணையை துரிதப்படுத்தும் சிபிசிஐடி போலீஸார்!

Spurious Liquor Deaths: செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியாகினர். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Written by - Yuvashree | Last Updated : May 25, 2023, 05:52 PM IST
  • கள்ளச்சாராய வழக்கிலு தொடர் திருப்பங்கள்.
  • சிபிசிஐடி போலீஸார் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர்.
  • விசாரணை முடிக்கிவிடபட்டுள்ளது.
விஷசாராய விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்..விசாரணையை துரிதப்படுத்தும் சிபிசிஐடி போலீஸார்! title=

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயிரிழந்து வந்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உயிரிழந்தனர். 

விஷசாராயம் குடித்த பலர் சாவு:

இரண்டு மாவட்டங்களிலும் நடைப்பெற்ற முதற்கட்ட விசாரணையில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனாலை கள்ளச்சாராயத்தில் கலந்து குடித்ததால்தான் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | சாம்பாரில் விஷம் கலந்து மாமனார், மாமியாரை கொலை செய்த மருமகள்! ஒன்றரை வருடம் கழித்து பிடிபட்ட சம்பவம்!

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்:

விஷ சாராய உயிரிழப்புகளுக்கு பிறகு, கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டங்களும் தமிழகத்தில் அனைத்து மூலைகளிலும் வலுபெற தொடங்கின. இதையடுத்து, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்படுவதாகவும் கூறினார்.

கொலை வழக்கு பதிவு:

தமிழக அரசின் உத்தரவின் பேரில், கள்ளச்சாராய வழக்கு தொடர்பான விசாணையை சிபிசிஐடி போலீஸார் முடிக்கிவிட்டுள்ளனர். சித்தாமூர் மற்றும் அச்சரம்பாக்கம் விஷச்சாராய மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இன்று செங்கல்பட்டு சிபிசிஐடி விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஏடிஎஸ்பி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் அச்சரம்பாக்கம் மற்றும் சித்தாமூர் விஷச்சாராய மரணங்கள் தொடர்புடைய வழக்குகளை கொலை வழக்குகளாக பதிவு செய்துள்ளனர். இது, இந்த வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யக்கோரி, விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி மகேஸ்வரி, டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கேட்டுள்ளதாகவும், சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக களத்தில் இறங்கி விசாரணை:

இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்ட சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஏடிஎஸ்பி மகேஸ்வரி என்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலை என்ற பெண்மணியிலும் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். அஞ்சலியிடம் சில நிமிடங்கள் ரகசிய விசாரணை மேற்கொண்ட ஏ டி எஸ் பி மகேஸ்வரி மருத்துவர்களிடமும் எந்த மாதிரியான விஷ சாராயம் அருந்தினார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.

மேலும் படிக்க | தாயின் தகாத உறவு, மகளிடம் அத்து மீறல்: தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News