பிளஸ் 2 தேர்வு முடிவு: பாடங்கள் வாரியாக தேர்ச்சி விவரம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பாட வாரியாக தேர்வானவர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளன.

Last Updated : Apr 19, 2019, 10:04 AM IST
பிளஸ் 2 தேர்வு முடிவு: பாடங்கள் வாரியாக தேர்ச்சி விவரம்  title=

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பாட வாரியாக தேர்வானவர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். 

இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. இதுதவிர தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. 

தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2  பொதுத் தேர்வில் மொத்தம் 91.3 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது. இவர்களில் மாணவர்கள் 88.57%, மாணவியர் 93.64%. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 95.37% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் கல்வி மாவட்டம்  95.37 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு கல்வி மாவட்டம் 95.23 சதவிகிதத்துடன் இரண்டாம் இடமும்  பெரம்பலூர் 95.15 சதவிகிதத்துடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பாட வாரியாக தேர்வானவர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளன.

Trending News