என் மீது வழக்கு போட திமுக அரசு திட்டம் - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு!

Edappadi Palaniswamy: எடப்பாடியில் நடைபெற்ற அதிமுக கொடியேற்று விழா நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 23, 2023, 10:12 AM IST
  • போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.
  • இதை சொன்னால் என் மீது வழக்கு போட திட்டம்.
  • சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
என் மீது வழக்கு போட திமுக அரசு திட்டம் - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு! title=

தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக  பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களிடம் சிறப்புரையாற்ற வருகை புரிந்தார். அப்போது ஏராளமான பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சி, ஆகிய ஏழு இடங்களில் அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் எந்த பயனுள்ள திட்டத்தையும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனை முப்பதாயிரம் கோடி கொள்ளை அடித்ததும், ஸ்டாலின் அப்பாவுக்கு சமாதி கட்டியதும், நூலகம் திறந்து வைத்ததும்தான், இரண்டு ஆண்டு கால சாதனையாகும். 

மேலும் படிக்க | அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? ​அறிவிப்பு இதோ!

இது எல்லாம் சுட்டி காட்டினால் என் மீது வழக்கு போடப் பார்க்கிறார். ஆனால் எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை, மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் பல கோடிக்கு அதிபதியான நீங்கள் நிலைமையை நினைத்து பாருங்கள் என்று பேசினார். அதிமுக பெயர் பலகை மற்றும் கொடியேற்று விழா எடப்பாடி வடக்கு ஒன்றில் செயலாளர் மாதேஷ், எடப்பாடி தெற்கு ஒன்றிய தலைமைச் செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் சமீபத்தில், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும், லஞ்ச பெற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில்  முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட   செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில்  கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன்,மைதிலி திருநாவுக்கரசு,எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் எஸ். எஸ்.ஆர் சத்யா,மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம்,மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார்,மற்றும் மாவட்ட,ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் என  500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு,விலைவாசி உயர்வு, லஞ்ச ஊழல் உள்ளிட்டவைகளை தடுக்க தவறிய  திமுக அரசை கண்டித்து  கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை பாஜகவிற்கு அழைக்கிறார் அண்ணாமலை: திமுக எம்.பி செந்தில்குமார் பளீர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News