ஓடி ஒளிந்து கொள்பவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மனோதங்கராஜ்!

சட்ட பேரவையில் அமைச்சர்கள் பதிலளிக்கும்போது ஓடிஒளிந்து கொள்பவர்தான் எடப்பாடி என அமைச்சர் மனோதங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேட்டி.  

Written by - RK Spark | Last Updated : Apr 28, 2023, 06:19 AM IST
  • அமித்ஷாவை சந்தித்திருப்பது அரசியல் நாடகம்.
  • ஓடி ஒளிந்து கொள்பவர்தான் எடப்பாடி.
  • அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி.
ஓடி ஒளிந்து கொள்பவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மனோதங்கராஜ்! title=

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தமிழக அரசின் தொழில் மற்றும் வனிகத்துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பில் தமிழகத்திலே குறைந்த விலையான  அடைக்கப்பட்ட தண்ணிர் லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் கோ ஆப் அக்வா விற்பனை நிலையத்தை துவங்கி வைத்த அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, சட்ட பேரவையில் அமைச்சர்கள் பதிலளிக்கும் போது ஓடி ஒளிந்து கொள்பவர் தான் எடப்பாடி. அவர் சட்டம் ஒழுங்கை பற்றி பேசுகிறார், தேசிய கணக்கீட்டை பார்க்கும் போது தமிழகத்தில் குற்றங்கள் மிக மிக குறைவு, இந்த நேரத்தில் இவர் அமித்ஷாவை சந்தித்திருப்பது அரசியல் நாடகம் என்றும், சட்ட பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்டு மக்களுக்கு எதிர்க்கட்சி செய்ய வேண்டியவைகளை செய்யாமல் இருந்ததை மக்களிடம் மறைக்கவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | டெல்லியில் சங்கமம்: மல்கோவா மாம்பழத்துடன் இபிஎஸ்... காலையில் சென்ற ஆளுநர்... ஸ்டாலின் நாளை பயணம்!

தமிழகத்தில் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளுவது இயல்பான ஒன்று தான். அதே வேளையில் விஏஓ கொலை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்தது மட்டும் இன்றி அந்த குடும்பத்தையும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து பாதுகாத்து உள்ளார் முதல்வர். தமிழகத்தில் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மட்டும் இன்றி குற்றவாளிவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார் முதல்வர். வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை. சட்டம் நிறைவேற்றிய நிலையில் தோழமை கட்சிகள் கேட்டு கொண்டதால் முதல்வர் கிடப்பில் போட்டார். இதற்கும் வரும் தேர்தலில் கூட்டணி குறித்தும் முடிச்சி போட வேண்டாம் என கூறினார்.

சமீபத்தில் தமிழக அரசு சட்டமன்றத்தில் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை என்கிற மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதாவிற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  இதற்கு விளக்கம் அளித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு வழங்க விரும்புவதாகவும், இது ஊழியர்கள் விருப்பத்தின்பேரில் மட்டுமே அமல்படுத்தப்படும், அதேநேரத்தில் வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற வேலை நேரத்தில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்தார்.  இருப்பினும் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு பொதுவெளியில் கிளம்பியது.  

மறுபுறம் தொழிற்சங்கள் சட்டமசோதாவை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன. இது தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர சட்டமசோதாவை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், "2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)" என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று கூறப்பட்டது.

மேலும் படிக்க | கோழைத்தனமான பிளாக்‌ மெயில்‌ கும்பல்‌... அண்ணாமலை ஆடியோவுக்கு பிடிஆர் விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News