TN Board Result 2024 : நாளை 10 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?

TN Board Class 10th Result 2024: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் நாளை காலை வெளியாகயுள்ள நிலையில், இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2024, 02:49 PM IST
  • 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்.
  • எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
  • தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
TN Board Result 2024 : நாளை 10 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்? title=

Tamil Nadu Board exam 2024: தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று, இதற்கான முடிவுகள் வெளியானது. 

மறுபுறம் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்றுது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 4,107 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பத்தாம் பொதுத்தேர்வில் 9.10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வெழுதியுள்ளன. இதற்கான பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 12 ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தன.

மேலும் படிக்க | எருமை மாட்டிற்கு பிறந்த வெள்ளை நிற எருமை... கரூரில் விந்தை சம்பவம்!

இந்நிலையில் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 10 ஆம் தேதி அதாவது நாளை காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

தேர்வு எழுதியவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பார்க்கலாம். அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்:

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சரிப்பார்க்க..

>tnresults.nic.in இணையதளத்தை தேடவும்
>SSLC Exam Results May 2024 என்பதை அழுத்தவும்.
>உள் நுழைவதற்கான log in லிங்க் திறக்கும்.
>உங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி-வருடத்தை குறிப்பிட வேண்டும்.
>உங்களது தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும், இதை ஸ்கிரீன் ஷாட் அல்லது டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | பெண் ஆசிரியரை கத்தியை காட்டி பலாத்காரம் செய்த கொடூரன்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News