ஜெயலலிதா பரவாயில்லை, எடப்பாடி பழனிசாமி தான் மோசம் - அமைச்சர் தாமோ அன்பரசன்!

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் 1200 பயனாளிகளுக்கு ரூ.14.72 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

Written by - RK Spark | Last Updated : May 10, 2023, 08:35 AM IST
  • இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் திருமண உதவி திட்டம் கொண்டுவரப்பட்டது.
  • ஜெயலலிதா அப்பொழுது கொண்டு வந்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
  • கருணாநிதி உதவித்தொகையை படிப்படியாக உயர்த்தி 25,000 ரூபாய் வரை வழங்கினார்.
ஜெயலலிதா பரவாயில்லை, எடப்பாடி பழனிசாமி தான் மோசம் - அமைச்சர் தாமோ அன்பரசன்! title=

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற சாதனை விளக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத்  தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் 1200 பயனாளிகளுக்கு ரூ.14.72 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில்  குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமு அன்பரசன் பேசுகையில், "கலைஞர் கருணாநிதி அவர்கள் 1989 ஆம் ஆண்டு, தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வந்த பொழுது,  இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் திருமண உதவி திட்டம் கொண்டுவரப்பட்டது.  எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 5000 ரூபாய் வழங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி அவர்கள் உதவித்தொகையை படிப்படியாக உயர்த்தி 25,000 ரூபாய் வரை வழங்கினார். 

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு மிகப்பெரிய அப்டேட், அரசு செய்ய புதிய மாற்றம்

அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார், பட்டப்படிப்பு பெண்கள் திருமண உதவித் தொகைக்கு விண்ணப்பித்தால் 50 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குவதாக அறிவித்தார். மேலும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்தார். நாங்கள் எல்லாம் இதனால் சந்தோஷப்பட்டோம். அந்த அம்மா இருக்கும் வரை அந்த திட்டத்தை ஒழுங்காக நடத்தினார்கள். அந்த அம்மா போன பிறகு ஒருவர் முதலமைச்சராக வந்தார். தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர், ஆனால் அவற்றை கிடப்பில் போட்டவர் தான் அப்பொழுதே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிதி நெருக்கடி இருந்தாலும் பரவாயில்லை அவற்றை கொடுத்து முடியுங்கள் என உத்தரவிட்டார் " என அமைச்சர் தாமோ அன்பரசன் பேசினார்.

மறுபுறம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில், திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும்,திமுக நாடாளுமன்ற தலைவருமான  டிஆர்.பாலு எம்பி சிறப்பு அமைப்பாளராக கலந்துகொண்டு திமுக  அரசின் இரண்டு ஆண்டு சாதனை திட்டங்களை விளக்கி கூறி சிறப்புரையாற்றி பேசினார்.  அப்போது அவர் பேசுகையில்,  இன்றைக்கு ஆட்சியிலே, அதிகாரத்திலே இருக்கின்ற கவர்னர் ரவி அவர்கள் தான் எதற்காக வந்தோம் என்பது தெரியவில்லை,இன்றைக்கு மிகப்பெரிய மனிதரைப் போல, உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல்வாதியைப் போல, தத்துவ ஞானியைப் போல ஒவ்வொரு நாளும் பேசிக் கொண்டிருக்கிறார், திராவிடம் காலாவதி ஆகிவிட்டது ஒரே பாரதம் தான் நிலையானது என்று சொல்கிறார்.

கேரளாவில் இருந்து வந்தார், உளவுத்துறையில் பணியாற்றினார், இவரைப் பற்றி யாராவது ஒருவர் போற்றி புகழ்ந்து ஏதாவது சொல்லி இருப்பார்களா, இதுவரை சொல்கிறார்களா என்றால் இல்லை அப்படி ஒன்றும், இவர்கிழிக்கவில்லை என்று தான் அர்த்தம், ஆளுநர் ரவியை ரொம்ப நாள் வைத்திருந்தால் விளைவுகள் விபரீதமாகிவிடும் என்று தான் துரத்தி விட்டார்கள், இங்கே தமிழகத்திற்கு வந்து ரவி இது மாதிரி நடந்து கொள்கிறார்.  இவர் கவர்னராக இருந்த இடத்தில் ஒரு வருடம் 8 மாத காலம் அந்த மோசமான இடத்தில் அக்ரிமெண்ட் போட்டு ஓஎன்ஜிசி தொடர்பான பணிகளை நான் செய்தேன், ஆனால் இவர் 2012 இல் போனவர் 2021  வருடம், 9 வருடங்கள் என்ன செய்தார், திறமை இல்லாதவர் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு, ஆகவே பிரதமர் மோடியை அதிகமாக திட்டாதீர்கள்,கொஞ்ச நாட்களில் இந்த கவர்னரை வீட்டுக்கு அனுப்பக்கூடிய வேலையை அவர்தான் செய்யப் போகிறார் என டி.ஆர்.பாலு எம்பி பேசினார்.

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News