Rape Case : கொடூரமாக கொல்லப்பட்ட புதுச்சேரி சிறுமி! கடத்தியது எப்படி? என்ன நடந்தது? பகீர் தகவல்கள்..

Puducherry Child Rape Case News in Tamil : புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி, கொடூரமாக கற்பழித்து கொள்ளப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் முழுமையாக நடந்தது என்ன? இதோ முழு தகவல்..  

Written by - Yuvashree | Last Updated : Mar 7, 2024, 12:27 PM IST
  • புதுச்சேரியில் கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயது சிறுமி
  • குற்றவாளிகள் யார்?
  • குழந்தையை கடத்தியது எப்படி? முழு விவரம்!
Rape Case : கொடூரமாக கொல்லப்பட்ட புதுச்சேரி சிறுமி! கடத்தியது எப்படி? என்ன நடந்தது? பகீர் தகவல்கள்.. title=

Trigger Warning: பின்வரும் செய்தியில் மனதை பாதிக்கும் வகையிலான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிர்ச்சிகரமான அனுபவங்களை நினைவுபடுத்தும் வகையிலான சம்பவங்களை, இந்த செய்தி கொண்டுள்ளது. எனவே, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் மற்றும் பலவீனமான மனம் படைத்தவர்கள் இதை படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Puducherry Child Rape Case Update News in Tamil : புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரில் வசித்து வந்த 9 வயது சிறுமி, கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பந்தமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், இந்த கொலை எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

9 வயது சிறுமி கற்பழிப்பு:

புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த கார் ஓட்டுநரின் 9 வயது மகள், மார்ச் 2ஆம் தேதியன்று தனது வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்த போது மாயமானார். சிறுமி காணாமல் போனதை அடுத்து, அவரது பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த விசாரணையின் போது வீட்டிற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், சிறுமி எந்த பக்கம் சென்றார், யாருடன் சென்றார் போன்றவை தெரியவந்தது. இறுப்பினும், காணாமல் போன 4 நாட்கள் ஆகியும் சிறுமி குறித்து எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. 

கடந்த 5ஆம் தேதியன்று, காணாமல் போன சிறுமி அவரது வீட்டிற்கு 100 மீட்டருக்கு அருகே உள்ள ஒரு கால்வாயில் சாக்குப்பையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் பிணமாக கிடந்ததை அடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. இதில், குழந்தை கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

முதற்கட்ட விசாரணை:

சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டி புதுச்சேரி மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக்குழு அமைக்க, நேற்று புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமியின் கற்பழிப்பு-கொலை விவகாரத்தில், கருணாஸ் என்ற 19 வயது இளைஞரும், விவேகானந்தன் என்ற 57 வயது நபரும் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு போலீஸாரின் பிடியில் உள்ளனர். சந்தேகத்தின் பேரில் மேலும் 5 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் யார் யார்? முழு பின்னணி!

என்ன நடந்தது? கடத்தியது எப்படி? 

சிறுமி, காணாமல் போன அன்றே கொலை செய்யப்பட்டிருக்கிறார். கடத்தப்பட்டு இரண்டரை மணி நேரங்களுக்குள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுமியை மதியம் 12:30 மணியளவில் கருணாஸ் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதும் தெரிய வந்துள்ளது. 

முதலில் கருணாஸ், வைக்கோல் புதரில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதை, விவேகானந்தன் பார்த்துவிட்டு சிறுமியை சமாதானம் செய்வது போல நடித்து, கருணாஸ் மற்றும் சிறுமி இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சென்றவுடன், சிறுமியின் கை,கால்களை கட்டி இருவருமே சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

கொலை செய்தது எப்படி?

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட அந்த சிறுமி, வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். அப்போது இவர்கள் சிறுமியின் வாயை பொத்தியதால் மூச்சுத்திணறி பலியாகியிருக்கிறார். குழந்தை, 1:45 மணியளவில் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது உடலை, அவர் காணாமல் போன அன்று 2:30 மணியளவில் குற்றவாளிகள் சாக்கடையில் வீசியுள்ளனர். 

அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்…

கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு மக்கள் பலர் பாேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளவர்கள் என அனைவரும் தற்போது இது குறித்து கண்டன அறிக்கைகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | கஞ்சா இளைஞர்கள் வெறிச்செயல்..கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News